பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அ- அறிவியல்-முன்னுரை


14 அ - அறவியல்-முன்னுரை - உள்ளத்தில் மிகுந்துள்ள உணர்வை, முகம் பளிங்கு (கண்ணாடி)

போல் காட்டி நிற்கும்.

- அதுபோல், நூல் துவலப் போகும் கருத்துகளை நூன்முகம் அஃதாவது பாயிரம் நுழைவாயில் போல் காட்டி நிற்கும்.

புறவுரை : நூலுக்கு வாயிற்புறமாக நின்று, நூலில் எதுபற்றி, எந்த அளவில், எதற்காக, என்ன பயன் நோக்கி, எவர்க்காக, எவ்வாறு எழுதப் பெற்றுள்ளது என்னும் செய்தியைச் சொல்வது.

தந்துரை நூற்பொருளைச் சுருக்க விளக்கமாக நூலாசிரியராலோ, அவர் தொடர்புள்ளவர்களாலோ, அந்நூலைப் படிக்க முற்படுவார்க்கு, முன்னதாகத் தந்து உரைப்பது இனி, தந்து என்பதற்கு நூல் என்று பொருள்கொண்டு, நூலுக்கு அமைந்த முன்னுரை என்றும் பொருள் கொள்ளலாம் என்க. -

புனைந்துரை: நூலுள் கூறப்பெறுவதைச் சுருக்கமாகவும், சிறப்பாகவும் அழகுபெறக் கூறுவது.

- பாயிரம் என்னும் சொல்லுக்கு இணையாக இத்தனைச் சொற்கள் உண்டு என்று மேற்காட்டிய நன்னூல் நூற்பா (சூத்திரம் விளக்கும்.

'நன்னூலுக்கு முன்னூல் எவற்றிலும் இவ்வகையான - பாயிரக் குறிப்புகள் இல்லை. பெயர்களும் இல்லை. பயன்படுத்தமும் இல்லை. நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு.

நன்னூலுக்கு முன், கி.பி. 8-ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்பெறும் பழமொழி நானுற்றில் பாயிரம் என்னும் சொல் 165-ஆம் பாட்டில் ஒரே இடத்தில் மட்டும் முதன் முதலாக வருகிறது. அப்பாடல் இது: -

மறுமணத்தன் அல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்தன் ஆகி ஒழுகின்செறு மனத்தார் . பாயிரம் கூறிப் படைதொக்கால் என் செய்ப ஆயிரம் காக்கைக்கோர் கல்

இதிலுள்ள பாயிரம் என்னும் சொல்லுக்கு வித்திற்கு வேண்டும் முகவுரை என்று பழைய உரை கூறுகிறது.

இதுதவிர, பாயிரம் என்னும் சொல் வேறு எந்தக் கழக நூலிலும் பயிலப்பெறவில்லை. - -

தமிழிலக்கண வரலாற்றியல்படி, கி.பி. 12-ు நூற்றாண்டினதான நன்னூலில்தான் பாயிரம் கூறுவதற்குரிய இலக்கணம் கூறப்பெற்றுள்ளது.