பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

13 


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 13

அ.1 அறவியல் (பாயிரவியல்)

முன்னுரை இவ்வியல் பிற நூற்பதிப்புகளுள் பாயிரவியல் என்றே அழைக்கப் பெறும். . -

'பாயிரம் என்பது நூலுக்கு முன்னுரையாக அமைவது என்று பொது வாகப் பொருள்தரும் ஒரு சொல்.

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

-நன்..! என்று நன்னூல் விளக்கம் தருகிறது. முகவுரை : நூலுக்கு முகம் போல் உரைக்கப் பெறுவது பதிகம்: பதியம்நூலுக்கு நாற்றங்கால் போல் இருப்பது. அல்லது ஒரு பொருள்மேல் பத்துப்பாடல்களால் ஆக்கப் பெறும் ஒரு நூலமைப்பு. அணிந்துரை:நூலுக்கு அழகுதரச் சிறப்புரையாக முன் நிற்பது. அஃதாவது நூலின் உள்ளுறை அழகை எடுத்துக் கூறுவது. நூன்முகம் நூலுக்கு முகமாக இருந்து உள்ளே கூறப்புகும் கருத்தைச் சுருங்க விளக்குவது என்னை? -

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் - * -706 என்றார் ஆகலின் கடுத்தது மிகுந்தது.