பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 அ 2 - 5 விருந்தோம்பல் 9

প্রাগ্য செல்விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு 36

பொருள் கோன் முறை :

செல்விருந்து ஒம்பி, வருவிருந்து பார்த்திருப்பான், வானத்தவர்க்கு நல்விருந்து.

பொழிப்புரை: தம் இல்லத்திற்கு வந்து தங்கியிருந்த விருந்தினரைப் பேணியும், அவர் சென்ற பின் மீண்டும் தன் வீட்டிற்கு விருந்தினர்கள் வர மாட்டார்களா என்று விரும்பி எதிர்பார்த்தும் இருப்பவன், வானில் உள்ளவர்களாகக் கருதப்பெறும் தேவர்களுக்கு, அவர்கள் விரும்பி வரவேற்கும் நல்ல விருந்தினன் ஆவான். ‘. .

சில விளக்கக் குறிப்புகள்

1. செல் விருந்து: ஒம்பப் பெற்று வழியனுப்பி வைக்கப் பெற்ற விருந்து.

2 வரு விருந்து பார்த்திருப்பான் மீண்டும் தம் வீட்டிற்கு விருந்தினர்கள் வரமாட்டார்களா என்று விரும்பி எதிர்பார்த்திருப்பான். பார்த்திருத்தல் - விரும்பி எதிர்பார்த்திருத்தல். 3. வானத்தவர்க்கு நல்விருந்து வானில் உள்ளவர்களாகக் கருதப் பெறும் தேவர்களுக்கு அவர்கள் விரும்பி வரவேற்கும் நல்ல விருந்தினன் ஆவான். .

- நல்விருந்து என்றதால் விரும்பி வரவேற்கும் தன்மை வெளிப்பட்டது. . X– வானத்தவர் – வானில் உள்ளவர்களாகக் கருதப் பெறுவோர்; அவர்கள் தேவர்கள் எனப் பெறுவர். - - - - - வானத்தவர் என்பது ஒரு கற்பனை வழக்கு இவர்களைப் பற்றிய --سمت۔ கூற்று ஆரியவியல் கற்பனையால் வந்திருந்தல் வேண்டும். அதன் தொடர்பால் தமிழ் நூல்களிலும் வந்திருத்தல் வேண்டும். மற்றபடி, தமிழியலில் இதற்கெல்லாம் மூலமும் இல்லை; முழுமையும் இல்லை; விளக்கங்களும் இல்லை. - தேவர்கள் . வானவர்கள் - இந் நிலவுலகத்திற்கு மேல் உள்ள உலகில் உள்ளதாகவும் அவ்வுலகம் எண்பத்தைந்து நூறாயிரம் 85 இலக்கம் யோசனை தூரப் பரப்புக் கொண்டதாகவும் கூறுவர்.