பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

322


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 322

மனவுணர்வும் (அன்புணர்வும் ஒன்று சேர்ந்து இயங்குவதால் இங்கு நோக்கி என்று கூறப்பெற்றது என்க.

4. அகத்தானாம் இன் சொல் : இனிய சொல் அகவுணர்வாகிய அன்புணர்வின் எழுச்சியாகக் கூறப்பெறுதல் வேண்டுமே யல்லது, புறவுணர்வின் வெளிப்பாடாக இருத்தல் கூடாது என்றார்.

- உணர்வு மனத்தினின்று தோன்றும் பொழுதே அஃது உண்மையாக இருத்தல் இயலும் அறிவுணர்வால் மட்டும் வெளிப்படுவதாயின், அது வெறும் புலனுணர்வாய் உலகியல் கலந்து இருக்கும். இருக்கவே அதிற் போலியும் பொய்யும் புனைந்திருக்கலாம் என்க.

இதனை, மனத்தானாம் மாந்தர்க்குணர்ச்சி (453) என்பதிலும் நிலைநாட்டுவார்.

5. இனதே அறம் : இன்ன நிலையினதே அறம் என்பது இன்னது

என்பது இடைக்குறையாய் இனது என்று நின்றது.

-'அறம் என்பது பொதுநலவுணர்வு என்று முன்னரே காட்டினம். - இத்தகைய உணர்வே, அனைத்துப் பொதுநிலைக்கும்

பொருந்துமாகலின், அவ்வனைத்தையும் உள்ளடக்கி, அறத்தின் படிநிலையை விளக்கினார்.

{Ꮄ. இது, முந்தைய பாட்டின் கருத்து விளக்கத்தைக் காட்சி விளக்கமாக

விரித்ததாகலின், அதன்பின் வைக்கப்பெற்றது. Ꭴ.

க ச துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மட்டும்

இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. 94

பொருள் கோள் முறை :

யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொலவர்க்கு, துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும்.

பெழிப்புரை வேறுபாடின்றி எவரிடத்தும் இன்பம் தரும் இனிய சொற்களைப்

பேசும் இயல்புடையவர்க்குத் துன்பம் செய்யும் இல்லாமை என்னும் நுகர்ச்சியின்மை இல்லையாகும். X- X- .