பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

336


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 336

!.

2

பொருந்திய உவமையுடன் கூடிய சிறந்த உலகியல் கருத்துடையது. இச் செய்யுள். இனிய உளவாக இனிமை பயக்கும் சொற்களும் கருத்துகளும் தனக்குத் தெரிந்திருக்க அல்லது உள்ளத்தில் இருக்க இனிய என்பது சொற்களையும் கருத்துகளையும் இணைத்தே நிற்கும் என்பது முன்னரே விளக்கப்பெற்றது. முன்னுரை காண்க)

இன்னாத கூறல் : இனிமை பயவாத சொற்களையும் கருத்துகளையும் ஒருவன் கூறுவது. - இன்னா என்பது கடுமையான சொற்களையும் தீமையான கருத்துகளையும் (31) (33) குறிக்கும். கனி இருப்பக் காய் கவர்ந்தற்று : இனிய மணமும் சுவையும் பொருந்திய கனிகளும் மரத்திலிருக்க, மணமும் சுவையும் கனிவும் இல்லாது, புளிப்பும் அல்லது கசப்பும் உள்ள காய்கள்மேல் ஆசை - விருப்பம் கொண்டு பறித்து உண்பதைப் போன்றது. கவர்வது விரும்புவதன் கண் நிகழ்வது, கவர்வு விருப்பாகும் (தொல், 845)

- கனி என்பது மணமும் சுவையும் பொருந்தியது. அதுபோல் ஒருவன் கூறுதல், இனிய சொற்களும் கருத்துகளும் கொண்டதாக இருத்தல் வேண்டும் என்று குறித்தார். . - காய் என்பது, மணமும் சுவையும் கனிவும் இல்லாததுடன், புளிப்பும் அல்லது கசப்பும் கொண்டது. அதுபோல், ஒருவன் கூறுதல், இனிமைபயவாத சொற்களும், நன்மை பயவாத கருத்துகளுமாக இருத்தல் கூடாது என்பதுடன், அச்சொற்களும் கருத்துகளும், செவிக்குக் கடுமையும், மனத்துக்குத் தீமையும் வெறுப்பும் தருவனவாகவும் இருத்தல் கூடாது என்றார். அது பேதைமையும் ஆகும் என்பதும் ஆசிரியர் குறிப்பு என்க. என்னை? பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங் கொண்டு ஊதியம் போகவிடல்' (33) என்பாரும் அவர். -இனி இருப்ப என்பது கனிகளும் காய்களும் மரத்தின்கண் இருப்ப என்று பொருள்தரும். - - - - கனி இருப்ப என்பதற்கு இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க என்று பரிமேலழகர் பொருள் தருவது, இயல்புக்கு மாறானது. கணிகள் கையிலிருப்பனவெனின், உண்ணப் போகும் நோக்கில் அவற்றை முன்னரே பறித்து வைத்திருத்தல் வேண்டும். அக்கால் கவர்தல் என்னும் சொல்லுக்குப் பொருள் இல்லாமல்