பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1

"நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம்”

- தாயுமானவர் பராபரக்கண்ணி. 151 "காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக"

- திருநா-தேவாரம்-நாலாந்திருமுறை. 739 "உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே"

- திருமந். 725. "இறைவனே, நீஎன் னுடவிடங் கொண்டாய் இனி உன்னை என்னிரக் கேனே”

- திருவாசகம். கோயில் திருப். 5

物 அறம் அறிவு ஆகியவற்றின் முயற்சிகளின் பயன் நிலமிசை

நீடு வாழ்தல் எனற்கு இதனைப் பின் வைத்தார் என்க

莎架 வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. 4

பொருள் கோள் முறை:

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

பொழிப்புரை (ஆசையால் ஒன்றை விரும்புதலும், (அஃதின்மையால் ஒன்றை விரும்பாமையும் அற்ற நடுநிலைவுணர்வுடைய அறமுதல்வனின், நெறிகளைப் பின்பற்றி இயங்கியவர்க்கு, இவ்வுலகின்கண் எவ்விடத்தும் எந்நிலையிலும் மனத்துயரங்கள் நேர்வன இல்லை.

சில விளக்கக் குறிப்புகள்:

1. இக்குறளை, வேண்டுதல்வேண் டாமை என்று வகையுளி செய்து எழுதுவது, ஒசைக் குறைவும் பொருள் மயக்கமும் தருவதாக உள்ளது. இது பற்றித் திருக்குறள் மணிவிளக்க உரையாசிரியர் அறிஞர். கா.அப்பாத்துரையார் கீழ்வருமாறு கருத்துரைப்பார். . . .