பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

84


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 84

i.

இது அறமுதலை உணர்ந்து, அதனுடன் ஒன்றிக் கலந்து, பருப் பொருள் நுண்பொருள் வெளிப்பாடின்றி, அருவ நிலை எய்தி, உணர்வாகிப் பிறவியின்றி நிற்கும், உயிரியக்க இறுதி நிலையைக் கூறியதாகும். கடல் போலும் முற்றுப் பெறாத பிறவிச் சுழற்சியினின்று, நாமே விரும்பி நம்மை விடுவித்துக்கொண்டு, பிறவாத நிலை என்னும் கரை சேர்ந்தாலன்றி, நாம் என்றென்றும் அதில் நீந்திக்கொண்டு தான் இருப்போம், என்றார். உயிர், தானே விரும்பித்தான் பிறவிச் சுழற்சியில் ஈடுபடுகின்றது. அந்நிலை அன்பினாலும் ஆசையினாலும், மற்ற உயிர்களோடும், பொருள்களோடும் கொண்ட தொடர்பினாலும் ஏற்படுகின்றது.

இதன் விரிந்த விளக்கங்கள் அன்புடைமை அதிகாரத்துள்

விளக்கப்பெறும். இதனால், ஆசிரியர் பல்பிறவிக் கொள்கையை ஒப்புகிறார், என்க.

இவ்வதிகாரக் கருத்துகளின் முற்ற முடிந்த பயனும் இது! உயிர்களின் இறைமை நிலையும் இது.

அங்கு (3) ஒரு பிறவி வாழ்வை ஆழி என்றார். இங்குப் பிறவித் தொடரைப் பெருங்கடல் என்றார். O