பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C4 அ-2-9 அடக்கம் உடைமை 13

அனைவருள்ளும், செல்வம் உடையவர்கள் அடக்கத்துடன் பணிவாக நடந்து கொள்ளுதல், அவர்களுக்குச் சொற்செலவு (செல்வாக்கு என்னும் பெருமை தருவதாகும். - பெரும்பாலும் அனைத்துச் செருக்கினும் செல்வத்தால் வரும் செருக்குப்

பிறரால் மிகவும் வெறுக்கத் தக்கதாகும்.

அவர்கள் செல்வமுடைமையால் இயல்பாகவே பிறர் அவர்கள்மேல் பொறாமையும் வெறுப்பும் கொண்டிருப்பர். அத்துடன் அவர்கள் செருக்குடன் நடந்தார்களாயின், அவ் வெறுப்பும் பொறாமையும் மேலும் மிகுந்து தோன்றிப் பகைமையையும் தோற்றுவிக்கும். அவர்களிடம் பணத்திற்காக உழைப்பவர்கள்கூட வேண்டா வெறுப்பாகத்தான் உழைப்பர்.

- இந்நிலையை மாற்றவும், இதற்குப் பகரமாக அவர்கள் மேல் பிறர் அன்பு கொள்ளவும் அவர்களது வாயுரைக்கு மதிப்புக் கொடுக்கவும் அவர்கள் விரும்பினால், அவர்கள் எல்லாரிடமும் பணிவாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சாய்காலும் செல்வாக்கும் பெருமையும் பெற முடியும்.

இதில், செல்வம் என்பதற்குப் பிற உரையாசிரியர்கள் சிறப்பு . என்றும், நன்மை என்றும், பாக்கியம் என்றும், வேறொரு செல்வம்’ என்றும், பலவாறாகப் பொருள் கொள்ளுவர். அவை அத்துணைச் சிறப்புடையன அல்ல.

- ஈண்டுப் பெருமை என்பதும், அப்பெருமையும் சொற் செலவு - அஃதாவது சாய்கால் செல்வாக்கு என்பதால் கிடைத்தது என்பதுமே பொருந்தும் பொருளாம் என்றுணர்க. 3. இது. சென்ற குறளின்கண் வந்துற்ற தோற்றம் என்பதற்குச் செல்வம், கல்வி, பதவி, அதிகாரம் முதலிய முன்னேற்றம் என்று பொருள் கொண்டதற்குப் பின் நிகழும் தன்மைகளையெல்லாம் விளக்கி, அவற்றின் ஏற்றத் தாழ்வுகளைப் பிரித்துக் கூறியதால், அதன் பின்னர் வைக்கப் பெற்றது என்க. -

கஉசு ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து. - 126

பொருள்கோள் முறை :

ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து,