பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

111


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 

- மனக்குடவர், ஒருசொல்லேயாயினும் கேட்டாருக்கு இனிதாயிருந்து

தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின் நன்மை யாகாததாகி விடும் என்பார்.

அவர் பொருட்பயன் என்பதைத் தீய சொல்லுக்குப் பொருத்திக் கூறுவதால், அப்பொருள் கொள்ள நேர்ந்தது, அது பொருந்துவதன்று.

- பரிமேலழகர், தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வருந்துன்பம் ஒன்றாயினும், ஒருவன் பக்கல் உண்டாவதாயின் அவனுக்குப் பிற அறங்களால் உண்டான நன்மை திதாய் விடும் என்டார்.

அவர் பொருட்பயன் என்பதற்குத் தீய சொற்களால் வரும் துன்பம் ஒன்றாயினும் என்று கூறுவது, பயன் என்னும் சொல்லுக்குப் மாறுபொருள் கொள்வதாகின்றது.

- பயன் என்னும் சொல்லுக்கு விளைவு’ என்னும் பொருள் காண்பதும், நன்று ஆகாது ஆகி விடும் என்பதற்கு ப், பிற அறங்களால் உண்டான நன்மை தீதாய் விடும் என்று வெளியிலிருந்து கருத்தை வருவித்துச் சுற்றி வளைத்துப் பொருள் கொளவதும், அவ்வாறு கூறினும் அது பொருந்துவதாக இல்லாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கன. இனி, பாவாணரும், பரிமேலழகரை யொட்டியே பொருள் குழப்பம் செய்குவர். - 5. இவர்கள் இக் குழப்பப் பொருளும் வேறுவேறு பிழையான பொருளும் கூறுவதற்குக் கரணியம், இக்குறளின்கண் நூலாசிரியர் தளைப்பிழை நேராவண்ணம் முதலடி ஈற்றுச் சீரை ஆங்குப் பெய்து கூறியதே என்க. ஒன்றானாலும் தீச்சொல் உளதாயின் பொருட்பயன் நன்றாகாதாகி விடும்’ . . - என்று இக்குறள் அமைந்திருப்பின், பொருள் தெளிவாகி விடும். ஆனால், இவ்வாறமைப்பின் உளதாயின் பொருட்பயன் என்னும் வெண்சீர் வெண்டளை கெட்டுக் காய் முன் நிரை வந்து, யாப்புப் பிழைக்கும் என்றலாலும், வேறு சொல் கொண்டு ஆண்டு.அப்பொருளைத் தளைப் பிழையின்றி அமைக்கலாகாது என்பதாலும், ஆசிரியர் அச்சொற்களை முன் பின்னாக அமைத்தார் என்க. அவ்வாறு அமைப்பினும் பொருள் பிழையாதிருப்பதும் கவனிக்கத் தக்கது கொண்டுகூட்டுப் பொருள் கோள் முறை இத்தகைய இடங்கட்கே பொருந்துவதாகும். - இவ்வாறு கொண்டுகூட்டுப் பொருள்கோள் முறையில் உள்ள சில குறள்கள் வருமாறு : , .... ‘ - ‘