பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

113


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 13

தீச் சொல் பொருட்பயன் என்னும் சொற்களை வைப்பு முறையிலேயே பொருள் கொள்வதால் நேர்ந்த பிழைகள் தெளிவானவை, என்னை? - தீச் சொல் பொருட்பயன் உடையதாக இருத்தல் இயலாது. அது பொருட்பயன் தருவதாக இருப்பின் அது தீச்சொல்லும் ஆகாதாகலின் என்க.

. இதற்குப் பரிமேலழகர் அமைவு கூறுகையில், தீய சொல்லாவன: தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன என்பார்.

- பொய், குறளை, கடுஞ்சொல் தீச் சொற்கள் ஆகா. தீய சொற்களும் T. *.

இங்கு, தீச்சொல் என்பது வேறு, தீய சொற்கள் என்பன வேறு. தீச் சொல் சொல்லே தீமையானது. தீய சொல் தீயவை சொல்லுதல்,

- சொற்களால் தீமை வருவது. - - ஒன்றானும் தீச்சொல் என்று ஒருமைப்படுத்திச் சொல்வதன் நோக்கமே, அவை தீயவை தரும் சொற்களல்ல, அது தீச் சொல் - அஃதாவது, ஒரு சொல்லே என்று நன்கு புலப்படல் வேண்டியே என்க. -

- தீய சொற்களாவன இழுக்குச் சொல், இழிவுச் சொல், இடக்கர்ச் சொல், தீயவற்றை ஊக்குவிக்கும் சொல், மனவுணர்வை அறிவுணர்வைக் கெடுக்கும் சொல், சுடுசொல் முதலியன.

- எடுத்துக்காட்டுகள் : 1. இழுக்குச் சொற்கள் :

முட்டாள், மடயன், பேடி முதலியன. 2. இழிவுச் சொற்கள் :

தேவடியாள், பெட்டையன், நக்கு, பிடுங்கு முதலியன. 3. இடக்கர்ச் சொற்கள் : (அவையல் கிளவி)

பீநாறி, மயிர், பெண்குறி, ஆண்குறிகளை வெளிப்படையாகச் சுட்டும் சொற்கள். - 4. தீயவற்றை ஊக்குவிக்கும் சொற்கள் :

கூட்டிக்கொடு,(கள்)குடி, கற்பழி முதலியன. 5. மனவுணர்வைக் கெடுக்கும் சொற்கள்

கொல்லு, வெட்டு, கலாம்விளை முதலியன. 8. அறிவுணர்வைக் கெடுக்கும்.சொற்கள் :

திருடு, கொள்ளையிடு, சுடு, சூறையிடு, தீயிடு, வழிப்பறி வெட்டிப்புதை