பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T4 அ-2-9 அடக்கம் உடைமை 13

முதலியன. 7. கடுசொற்கள் :

ஒழுக்கமிலி, முல்லைமாறி, நேர்மையிலன், திருடன், செத்தொழி . முதலியன. 6. ஆசிரியர், ‘சொல்வன்மை அதிகாரத்தில்,

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு’ - – 642 என்பதும் இதையொட்டியதே. முன்னைய குறளில் உள்ள நாவடக்கம் கொள்ளாமல் போவதால் வரும் கேடுகளை இதிற் கூறியதால் அதன் பின்னர் இது வைக்கப்பெற்றது.

கஉசு . தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு. 129

பொருள்கோள் முறை :

தீயினால் சுட்டபுண் உள்.ஆறும் நாவினால் சுட்ட வடு ஆறாதே.

பொழிப்புரை தீயினால் சுடப்பட்ட புண் உள்புறமாக ஆறி, வெளிப்புறத்து வடுவாகி நிற்கும்; நாவினால் சுடுசொல் கூறியதால் ஏற்பட்ட மனப்புண், புறத்தே ஆறி உள்ளத்து என்றும் வடுவாகி நிற்கும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. பொழிப்புரை, பரிதியாரின் உரையைத் தழுவியது, அது. சிறந்த

2. தீயினால் சுட்டபுண் உள் ஆறும் தீயினால் சுடப்பட்ட புண் உள்புறமாக ஆறி, வெளிப்புறத்து வடுவாகி நிற்கும்.

- சுடப்பட்ட புண்ணைச் சுட்டபுண் என்று, செயப்பாட்டு வினையைச் செய்வினையில் கூறினார்.

தீயினால் சுடுவது, நெருப்பினால் சுடுவதோ கொள்ளியாற் சுடுவதோ அன்று. எரிதீயாற் சுடுவதாம். 3. நாவினால் சுட்ட வடு ஆறாதே - நாவினால் சுடுசொல் கூறியதால் ஏற்பட்ட மனப்புண், புறத்தே ஆறி உள்ளத்து என்றும் வடுவாகி நிற்கும்