பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

151


- ஒன்று, குடும்பம்.

அப்பொருள், 171, 502, 01, 603, 604, 509, 68, 704, 794, 887, 888, 952, 954, 957, 992 ஆகிய குறள்களில் கையாளப் பெறுகின்றது.

- இரண்டு, குடியின மக்கள் அஃதாவது மொழியின மக்கள்.

அப்பொருள், குடிசெயல் வகை (அதிகாரம், 1022, 1023, 1025, 1028, 1030 ஆகியவற்றில் கொள்ளப் பெறுகிறது.

மூன்று, குடிமக்கள் (குமுகாயம் பல இனமக்கள் கலந்தது)

அப்பொருள், 381. 390, 542, 54, 549, 554, 632 ஆகிய குறள்களில் கையாளப் பெறுகின்றது. -

குடிமை என்னும் சொல் குடி என்னும் பெயரடியாகப் பிறந்த பண்புப் பெயராதலின் இம் மூன்று பொருள்களையும் அச் சொல் சுட்டும் என்க. அப்பொருள்களை அவ்வவ் விடங்களை நோக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்க. மை பண்புப் பெயரீறு, ஆண் ஆண்மை; பெண் - பெண்மை.

எனவேதான், இவ்விடத்தில் அச்சொல், இம் மூன்று பொருளையும் ஒரு சேரக் குறிக்குமாறு ஆசிரியர் மிக நுட்பமாகக் கையாளுவார்.

- இம் மூன்று பொருள்களும் தனித்தனியாக வராமல் அடுக்கு முறையில் இவ்விடத்தில் வந்தது என்க.

(எ-டு) பகை என்பது குடும்பப் பகையையும் குறிக்கும் குடிப் பகையையும்குறிக்கும்; அரசுப் பகையையும் குறிக்கும் ஒருசொல்.

குடும்பப் பகை 16, 13, 8 195 முதலியவை.

குடிப்பகை : 304, 450, 735, 872, 883, 884, 885, 888 முதலியவை.

அரசுப்பகை 727, 734, 74; 763, 861, 863, 857,874, 875 முதலியவை.

3 இழுக்கம் இழிந்த பிறப்புஆய் விடும் ஒழுக்கத்தின்கண் பிறழ்ச்சி தோன்றி இழுக்கம் நிகழுமாயின், அம் மூன்று அமைப்புகளும் கெட்டு மக்கள் பிறவிச்சிறப்புத் தாழ்ந்து அடுத்துள்ள விலங்குப் பிறவிநிலை ஆகிவிடும்.

ஒழுக்கத்தின் எதிர்நிலை இழுக்கம் -

ஒழுக்கம் இழிந்தநிலுை இழுக்கம்

ஒழுக்கத்தின் பாற்பட்டு நின்ற மக்கள் அது பிறழ, ம்க்கங்குரிய மாந்தவியல் சிறப்புக் கூறுகளாய பண்பு, நாகரிகக் கூறுகள் முதலியன இல்லாமற் போய், விலங்குத் தன்மைகள் மேலோங்கி, மக்கட்பிறவி