பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

ஊருத தஸ்ய யத் வைசிய: - குத்ரோ அஜா யத’ - இனி, பிராமணரை உயர்த்திக் கூறும் இன்னொரு சொலவகம் வருமாறு:

தைவா தீனம் ஜகத்ஸர்வம்; மந்த்ரா தீனந்து தைவதம், தன்மந்த்ரம் பிராமணா தீதம்; பிராமணா மம தைவதம்! இதன் பொருள் : உலகமெலாம் தெய்வத்திற்குள் அடக்கம்; தெய்வம் மந்திரத்திற்குள் அடக்கம், மந்திரம் பிராமணர்க்குள் அடக்கம். பிராமணனே நம் தெய்வம் - - - அதனை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் தங்களை அனைவரினும் உயர் பிறப்பினராகக் கருதிக் கொள்ளும் தருக்கத் தகைமை இன்றுவரை விடாமல் கடைப்பிடிக்கப் பெற்று வருகிறது.

-

அவர்கள், கோயிற் பணிகளில் ஈடுபடும் பொழுது அங்குத் தெய்வப் பணிகளுக்காகவும், கலைப்பணிகளுக்காகவும் பெண்டிரும் அமர்த்தப் பெறுதல் தொன்று தொட்டே நிகழ்ந்து வருகிறது. அக்கால் அவர்கள்வழி, இப் பார்ப்பனர் ஒழுக்கம் கெடுதலும் இயல்பாகிறது. அவ்வாறு ஒழுக்கம் கெடினும், இவர்கள் குலப்பெருமைகளையே குன்றாமல் பேசி, அவ்வொழுக்கக் கேட்டினை ஒருபொருட்டாய் மதியாமையும் மறைக்கின்றமையும் உடனாகவே நிகழ்ந்து வருகின்றன. இவற்றை யுட்கொண்டே, நூலாசிரியர் இவர்களின் பிறவிச் செருக்கையும், தீய வொழுகலாறுகளையும் கண்டிக்கும் வகையில், இக் கருத்தினை இங்கு எடுத்துக் கூறினார், என்க.

சால ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. - நல்வழி : 31 இனி, இவர் இவ்வாறு கூறும் நிலையைத் திசைதிருப்பவே, காலிங்கரும், பரிமேலழகரும், ஒழுக்கம் என்னும் சொல்லுக்கு வருண வொழுக்கம் அஃதாவது தங்கள் பிராமணர் குலத்திற்கு உரிய குலவொழுக்கம் என்று பொருள் படும்படி உரையும் விளக்கமும் எழுதியுள்ளனர். பரிமேலழகர் எழுதிய உரைக்குத் தெளிவுரை எழுதிய கோ. வடிவேலு

என்பார் (1918 ஆசாரம் குறைய’ என்று எழுதியிருப்பதும், அஃதோடமையாது, , - . . . .

‘சிறப்புடைய வருணத்தவராகிய பிராமண்ருக்கு ஆசாரம் குறையச் சாதி கெடும் என்று சொல்லினன் - றையச் சாதிகெடும் என்னும் இவ் விஷயம் மற்றைய சாதியாருக்கும் கொள்ளப்படும்