பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

159


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 159

என்று கூறியது உபலட்சணமாம் என்று நச்சுத்தனமாக அடிக்குறிப்பு எழுதியிருப்பதும் கவனிக்கத் தக்கனவும் கண்டிக்கத் தக்கனவுமாம், grTo.

ஆசாரம் என்பது பெரும்பாலும் குலவொழுக்கத்தையே குறிக்கும் சொல்லாகக் கருதப்பெற்று வருகிறது. இங்கு நூலாசிரியர் ஒழுக்கம் என்று கூறுவது குலமோ மதமோ தழுவாத தனிமாந்த ஒழுக்கமும் பொதுவொழுக்கமுமேயாம். பொதுவொழுங்கிற்கும், தனியொழுங் கிற்கும் ஒத்துவராமல், தங்கள் குல, மதவொழுக்கங்களுக்கே கட்டுப்படும் அவர்கள், ஆசிரியர் கூறும் ஒழுக்கமும், அக் குல, மத வொழுக்கங்களையே என்று திசை திருப்புவது, ஒன்றால் அறியாமையாக இருத்தல் வேண்டும். அன்றால் மக்களை ஏமாற்றக் கரவாகத் தங்கள் வேதமதக் கொள்கைகளை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியாக இருத்தல் வேண்டும், என்க. - இனி, பேரறிஞர் பாவாணரும், இதில் உள்ள ஒழுக்கம் என்பதைத் தமிழவொழுக்கம் என்று புடைமாறி உணர்ந்து, ‘பிராமணன் தமிழ்நாட்டில் தமிழவொழுக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூறிய கூற்றாக இதைக் கூறியிருப்பது குறையுரையும் புரையுரையுமே ஆகும்.

நூலாசிரியர் கூறுவது பொதுமாந்தவொழுக்கமே தவிர, தமிழ வொழுக்கம் என்பதாகப் பிரித்துக் கூறுவது அன்று. காலிங்கரும் பரிமேலழகரும் அதைக் குலவொழுக்கமாகக் கொண்ட பிழையையே இவரும் வேறு கோணத்தில் தமிழவொழுக்கம் என்பதாகக் கூறுவது, அவர்கள் அடித்த மாங்காயையே இவர் வேறு கோணத்திலிருந்து அடித்தது போலவே கருதப்படும் ஆகலின் அவருடையது சரியான கருத்தன்று என்று கூறி விடுக்க - இனி, பேரறிஞர் கா.சுப்பிரமணியன்ார் போன்றவர்களும், இக்குறளில் வரும் பார்ப்பான் என்னும் சொல்லுக்கு ‘ஆரியப் பார்ப்பான் என்று நேரடிப் ப்ொருள் தருவதால் இழுக்கோ, ஏதமோ என்று கருதியோ என்னவோ நூல் கற்பான் என்று பொருள் கூறுவது, தேர்பொருள் தெற்கிருக்க வடக்கே போய் வழுப்பொருளைக் கண்டதற் கொப்பாகும்.

என்னை?

நூல்கற்பானுக்குக் குடிப்பிறப்பு எதற்கு நூல் கற்பான் ஒழுக்க்த்தில் குறைவு பட்டானர்யின் அவனது குடியின் சிறப்பு அழிந்துவிடும் என்று அவர் உரைகாணின் குடிச்சிறப்பு இல்லாதவன் ஒருவன்நூல் கற்றவனாக இருக்க இயலாதோன்ன்னும் வினாவுக்கு விடையில்லாமற் போகும். நூல் கற்பது பொதுநிலை. இதற்குக் குடிச்சிறப்போ, குலச்சிறப்போ, மதச்சிறப்போ தொடர்பில்லை. - -