பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

171


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் TZ1

அறியாமை இருளும், அவனுடைய குடும்பத்தார்க்கும், அவர்களை அடுத்துவரும் கொடியினர்க்கும், அவர்களை அணைந்து வரும் குலத்தினர்க்கும், அவர்களைக் கொண்டு உருவாகும் குடியினர்க்கும், அவர்களை உள்ளடக்கிக் கிடக்கும் இனத்தினர்க்கும், அவர்களை உறுப்பாகக் கொண்ட நாட்டினர்க்கும், அவர்கள் அடங்கிய உலகத்தினர்க்கும் தொடர்ந்து பற்றுவதாகும் என்பது, கால நீட்சியால் கண்டு அறியப்பெறும் உண்மையாம். பார்த்தீனியம் எனும் நச்சுச் செடி பரவுதலைப் போன்றது, அது (:008),

- இதுபோலவே, நல்லொழுக்க முடையானின் நல்லுணர்வும், நல்லறிவும், நல்லுடலும் பொதித்த நற்செயல்களை விளைவிக்கும் நல்வித்துகளின் வளர்ச்சியும், பரவுதலும், நல்லுலகம் சமைவதற்குக் காலநீட்சியில் உதவுவதாகும். -

- இது, மனம், அறிவு, உடல் ஆகிய மூவியக்கத்திற்கும் நன்மை தரும்

‘பயன்மரம் உள்ளுர்ப் பழுத்ததைப் (216 போன்றதாகும்.

- இத்தகைய நல்லொழுக்கம், நன்றி, வித்து என்னும் மூன்று உலகப் பொதுநலத்திற்கும், பொது அறத்திற்கும் அடிப்படையாகிய கூறுகளை, ஒருவன் தனிநலத்துக்கு உகந்த கூறுகளாக்கி, அவனுக்கு அவை இம்மைப் பயனையும் மறுமை (மறுவுலகப் பயனையும் தருவனவாகும் என்று பரிமேலழகர் உள்ளிட்ட பாவாணர் வரம்பிட்ட உரையாசிரியர் பலரும் கூறுவது, அவர்களின் பரந்துபட்டு வளராத குறுகிய வுணர்வையும், அதற்குக் காரணமாகிய அவர்தம் மதச்சார்பையுமே காட்டுவதாகும் என்று கருதி விடுக்க

3. இது, முன்னைய குறளில் கூறப்பெற்ற மேன்மைக்கும், பழிக்கும் விளக்கமாக அமைந்திருத்தலின், அதன் பின்னர் நிரலிடப் பெற்றதாம் fT5, .

கங்க . ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய -

வழுக்கியும் வாயால் சொலல் - 139 பொருள்கோள் முறை .

தீய வழுக்கியும் வாயால் சொலல், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே, பொழிப்பு ைஇமை பயக்கின்ற சொல்லையோ கருத்தையோ, வாய் தவறியும்

தம். நல்லுரை பகரும் வாயால் சொல்லுதல், ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்க்குப் பொருந்தாது.