பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 அ-2-11 பிறனில் விழையாமை 15

கசரு. எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி. - 145

பொருள் கோள் முறை :

எளிது என இல் இறப்பான் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும்

பொழிப்புரை : யாதோ ஒரு காரணமாய்ப் பிறன் துணைவியின் தொடர்பு எளிதாகக் கிடைத்தது என்று கருதி, அவன் இல்லத்தே சென்று, அளவு கடந்து ஈடுபடுவான், எக்காலத்தும் அழியாமல் நிற்கும் பழியினை எய்துவான்.

1. எளிது என இல்இறப்பான் - யாதோ ஒரு காரணமாய்ப் பிறன் துணைவியின் தொடர்பு எளிதாகக் கிடைத்தது என்று கருதி, அவன் இல்லத்தே சென்று அளவுகடந்து ஈடுபடுவான்.

- காரணம் இருபுறத்ததாகவும் இருக்கலாம்.

அது, செல்வம், பதவி, அதிகாரம், அழகு, கணவனது உடற்குறை

முதலியவற்றுள் யாதோ ஒன்றோ சிலவோ இருந்து, பிறன் மனைவியது தொடர்பு எளிதாகலாம்.

- இல்இறத்தல் - பிறனது இல்லத்தின் கண்ணே சென்று அளவு கடத்தல்,

இறத்தல் அளவு கடத்தல், . -

‘ஏதிலான் தாரம் நம்பி எளிதென இறந்து - சிவக: 2769.

2. எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழிஎய்தும் எக்காலத்தும் அழியாமல்

நிற்கும் பழியினை எய்துவான்.

விளியாது அழியாது.

பழி பிறரால் பழித்துக் கூறப்பெறும் செயல்.

- பழி இருகுடும்பத்தும், மக்களையெல்லாம் முன்வைத்துக் கூறப் பெறும்

ஆகலான் எக்காலத்தும் அழியாது நிற்கும் என்றார்.

3. முன்குறளில் எனைத்துணையராயினும் என்றதால், இவ் விழிவொழுக்கம் எளிதானது கூறப்பெற, அதனையடுத்து இது நின்றது.