பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

195


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 195

பொழிப்புரை தினை அளவானும் இது தவறு என்று ஆராய்ந்து சிந்தியாமல், பிறன் இல்லத்தில் புகுந்து, அவன் துணைவியொடு தொடர்பு கொள்பவன், எத்துணைச் சிறப்புற்றவராயினும் என்ன, (அவன் அச்சிறப்பினை இழந்தவனே)

சில விளக்கக் குறிப்புகள் :

1. தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல் - தினை அளவானும் இது தவறு என்று சிந்தியாமல் பிறன் இல்லத்தில் புகுந்து, அவன் துணைவியொடு தொடர்பு கொள்பவன். தினைத்துணை - தினை, இவ்விடத்து அளவு குறித்தது. தினைத் துணைச்

சிறிய அளவேனும். தேரான் - இது தவறு என்று ஆராய்ந்து சிந்தியாமல், பிறன்இல் புகல் பிறன் இல்லத்தில் புகுந்து, அவன் துணைவி யொடு

தொடர்பு கொள்வது. - அதைச் செய்பவன்.

பிறனது இல்லத்தில் புகுவது என்று இடக்கரடக்காகக் கூறினார். 2. எனைத்துணையராயினும் என்னாம் - (அத்தகையவர்கள்) எத்துணைச் சிறப்புடைவராக இருப்பினும் என்ன ஆம்? அவர்கள் அச்சிறப்பினை இழந்தவர்களே! - அத்தீயவொழுக்கம் கடைப்பிடிப்பவர்கள், செல்வம், கல்வி, பதவி, அதிகாரம் முதலிய எந்த நிலையில் சிறப்புப் பெற்றவர்களாயினுந்தாம் என்ன ? அத்தீயவொழுக்கம் காரணமாக அச்சிறப்புகளை இழந்தவர்களே ஆவர். - நூலாசிரியர் காலத்திலிருந்து பிறனில் விழையும் இத் தீயவொழுக்கம் நடைபெற்றுவருவதையும், அவ் விழிவொழுக்கத்தில் செல்வம், கல்வி, பதவி, அதிகாரம் முதலிய நிலைகளில் மேம்பட்டவர்களும் சிறப்புற்றவர்களுங்கூட ஈடுபட்டு வருவதையும், இக்குறள் குறிப்பிட்டுக் கூறுவது, கவனிக்கத் தக்கது. . 3. மேலே கூறப்பெற்ற குறளில், இத் தீயவொழுக்கத்தில் வெளிப்படையாக ஈடுபடுபவர்களைப் பற்றிக் கூறியவர், இதில் தம் சிறப்பியல்புகளால், அக்குற்றத்தை மறைமுகமாகச் செய்பவர்களின் இழிவைக் கூறி எச்சரித்துக் கூறுவதால், அதன்பின் இது வைக்கப்பெற்றது.