பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

207


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 2O7 சில விளக்கக் குறிப்புகள் :

1. அறன் வரையான் அல்ல செயினும் - அறச்செயல்களைக்

கடைப்பிடியாத ஒருவன், அறமல்லாதவற்றையே செய்யினும்.

அறன் வரையான் - அறத்தை வரைந்து கொள்ளாதவன்

கடைப்பிடியாதவன்.

வரைதல் - உரிமைப்படுத்திக் கொள்ளுதல், மேற் கொள்ளுதல்,

கடைப்பிடித்தல்.

அல்ல செயினும் - அறமல்லாதவற்றையே செய்யினும்.

அவை, பொய்கறுதல், புறங்கூறுதல், விருந்தோம்பாமை, வறியார்க் கொன்று ஈயாமை, நடுவுநிலையில்லாமை, தீவினை செய்தல்

முதலியவை.

2. பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறனது இல்லற எல்லைப்பட்டு நிற்பாளின் பெண்மை நலத்தை விரும்பாமை நன்று.

பிறன் வரையாள் - பிறனது இல்லற எல்லைப்பட்டவள். வரை - எல்லை. இங்கு இல்லற எல்லை. பிறனுக்கு மனத்தால் உரியவள்.

பெண்மை - பெண்மை நலம்.

-இவ்விடத்து அவன் விரும்புதற்குரிய வகையில், தன் மனைவியிடத்து

இல்லாத அழகு, பண்பு, கவர்ச்சி முதலிய நலன்கள். நயத்தல் - ஆசையான் விரும்புதல். - மற்ற அறமல்லாத செயல்களைச் செய்யினும் இதைச் செய்யக் கூடாது

என்றார். ஏனெனில், மற்றையவை தன்னொழுக்கத்தின்றாற் பட்டவை. அவற்றை அவன் செய்தால் அவனுக்கு மட்டுமே தீங்கு தருபவை. ஆனால், பிறன்மனை நயத்தல் பொதுவொழுக்கத்தின் பாற்பட்டது ஆகையினால், அனைவர்க்கும் குமுகாய வொழுங்கிற்கும் கேடானது.

எனவே அதைச் செய்யாதிருப்பது அனைவர்க்கும் நல்லது என்றார். - இது, கேடுகள் பலவற்றுள்ளுள் பெருங்கேடு இஃதென்றது. * . . .

பிறன்வரை நின்றாள். கடைத்தலைச் சேறல் அறன் அன்றே - நீதிநெறி விளக்கம் : 76 - என்றார் பிறரும்