பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அ-212 பொறையுடைமை 16

பொறுமை அமைவு அமைந்திருத்தல், - இது மனவுணர்வின்பாற்பட்ட இயல்புக் குணம். இயற்கையாய் இருப்பது.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அறவுணர்வன்று. மேலும் இவ்வுணர்வு அடக்கத்தின் பாற்படும். அது முன்னரே கூறப்பெற்றது.

பொறை சுமை . சுமை பொறுத்தல்

இஃது அறிவுணர்வால் மன உணர்வை அடக்கிக் கொள்ளுதல். இது குணமன்று அறமுயற்சி செயற்கையாய் இருக்கச் செய்வது.

இனி, நூலாசிரியர், உவமைகளைக் கையாளுவதில் வல்லரும், நுண்ணுணவர்வுள்ளாரும் ஆகையால், சுமையைத் தாங்கிக் கொள்வதற்கு நிலத்தையே பலவிடங்களிலும் எடுத்துக்காட்டாய்க் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

நிலக்குப் பொறை நிலத்துக்குச் சுமை,

நிலம் போல. பொறுத்தல் தலை’ - 151 ‘வையம். ஆற்றும் பொறை’ - 189 ‘கடுங்கோல்....... நிலக்குப் பொறை” - 570 ‘கண்ணோட்டம். இலார் நிலக்குப் பொறை’ - 572 இசைவேண்டா ஆடவர். நிலக்குப் பொறை’ - 1003 இதனையே ஒத்து உரைப்பார் பிறரும்.

நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள’

- பரிபாடல் :43:28

இனி, நூலாசிரியர் இந்த உண்மையை மிகநுண்மையாக இன்னோர் இடத்தில் கையாளுதல் உற்று நோக்கி மகிழத்தக்கது. r .

அது, சான்றோர் தம் சான்றாண்மையில் குன்றி விடுவராயின், இவ் வலிய நிலமும் தன் சுமையைத் தாங்காதாகி விடும் - என்பது.

‘சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் . தாங்காது மன்னோ பொறை’ - 990

இனி, பொறுத்துக் கொள்ள வேண்டியனவற்றுள் குறைகள், ! குற்றங்கள், வரைமீறிய செயல்கள் முதலியன அடங்கினும், அவற்றுள் முதன்மையானதும், தலையாயதும், அடிக்கடி நிகழ்வதும், உடனுக்குடன் நெஞ்சில் உறைப்பதும், மானம் கருதுவதும் ஆகிய இழிவான கடுமையான