பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

215


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 215

3. தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மைச் சொல்லாலும் செயலாலும் இகழ்ந்து, தம் நல்வாழ்வுக்கு ஊறு செய்பவரையும், தாம் பொறுத்துக் கொள்ளுதலே மிகச் சிறந்த பொதுமை அறம் ஆகும். இகழ்வார் - தம்மைச் சொல்லாலும் செயலாலும் இகழ்பவர். - நிலத்தை மண்வெட்டியால் தோண்டும் ஒலிக்குறிப்பை இங்குச்

சொல்லுக்கும், குழிபறிப்பைச் செயலுக்கும் பொருத்தி மகிழ்க. - நிலம் நன்னிலைக்கண் இருந்து, அகழ்தலால் ஊறுபாடு எய்தியது போல், தம்மை இகழ்ந்த சொல்லாலும் செயலாலும் தம் நன்னிலை வாழ்வு ஊறுபடுத்தப் பெற்றதைக் குறிப்பால் உணர்க. பொறுத்தல் - பொறுத்துக் கொள்ளுதல் மனத்தாலும் அறிவாலும் தாங்கிக்

கொள்ளுதல், - - தலை - தலைசிறந்தது. மிகச்சிறந்த பொதுமை அறமாம் என்க. என்னை?

அறமே பொதுமை உணர்வாகலின்.

(காண்க : அறத்துப்பால் முன்னுரை) 4. கடுமையான, இழிவான, இகழ்வான சொற்களைப் பொறுத்துக் கொள்வதே அறிவுடைமை என்பதைச் சான்றோர் பிறரும் ஒப்புவர்.

‘எள்ளிப் பிறர்உரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில் கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் - மெள்ள அறிவென்னும் நீரால் அவித்தொழுகல் ஆற்றின்

பிறிதெனினும் வேண்டா தவம்’ - அறநெறிச் : 1.01. நீர்த் தி s’ -- - கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ - மேன்மக்கள் தம்வாயால் மீட்டு நாலடி : 70

நேரல்லர் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித்து இருத்தல் தகுதி - நாலடி : 72 - (தாரித்தல் பொறுத்தல்)

ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்கும் காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? - பழமொழி : 268 5. இனி, நிலம் என்பதை நூலாசிரியர் பொதுவாகப் பெண்ணுக்கும்,

சிறப்பாக இல்லக் கிழத்திக்கும் உவமையாகக் காட்டுவார்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் - 1039