பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 அ-2-13 அழுக்காறாமை 17

கசுசு. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுTஉம்

உண்பது உம் இன்றிக் கெடும். - 166

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுபவனுடைய சுற்றம் உடுப்பதற்கும் உண்பதற்கும் ஏதுமின்றி ஏழைமைப்பட்டு அழிவுறும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் இருப்பவன் இல்லாதவனுக்குக்

கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுபவனுடைய சுற்றம். - கொடுப்பது என்றதால், கொடுப்பவனும், அதைப் பெற்றுக்

கொள்பவனும் ஆகிய இருவரையும் கூற வேண்டியதாயிற்று. கொடுப்பவன் இருப்பவனாகவும் பெற்றுக் கொள்பவன் இல்லாதவனுமாக இருத்தல் இயல்பென்க. இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுவது, தனக்கு அதைக் கொடுக்கவில்லையே என்று மனம் மறுகுவது. சுற்றம் - என்றதால் தன்னையும் உள்ளடக்கினார், என்க. - தன்னைக் கூறாது சுற்றத்தை மட்டும் கூறியது அழிவின் விரைவு கருதி, 2. உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுப்பதற்கும் உண்பதற்கும்

ஏதுமின்றி ஏழைமைப்பட்டு அழிவுறும். - உடுப்பதும் உண்பதும் - என்பதில், உடுப்பதை முன்வைத்துக் கூறியது, உண்டு உயிர்வாழ்வதற்காக உடுப்பதை முதலிற் தடுத்தது. அதன் பின்னர் உண்ணவும் இன்றி ஏழைமைப்படுவர் என்று செயல் நிறையாகக் குறித்தார் என்க. இன்றிக் கெடும் . முதலில் உடுப்பதற்கு இன்றிப் பிறகு உண்ணுவதற்கும் இன்றிப் படிப்படியாக ஏழைமைப்பட்டு இறுதியில் அழியும் என்றவாறு. - இவ்வாறு நிகழ்வது தானே நிகழ்வதன்று தன்னால் நிகழ்வது என்னை? பிறர்மேல் பொறாமைப்பட்டுக் கொண்டிருப்பவன் மனம் புழுங்கி,

வேறு முயற்சிகள் செய்யாது, மடி கொண்டு, பின் சோர்வுற்றுத் தளர்ந்து போவது இயல்பாம் என்க. - . .