பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 அ-2-14 வெஃகாமை 18

அ-2 இல்லறவியல் அ-2-14 வெஃகாமை -18

அதிகார முன்னுரை

வெஃகாமையாவது விரும்பாமை.

வெஃகுதல் விரும்புதல், வெஃகாமை விரும்பாமை. இதனின் சிறப்புப்

பொருள், அஃதாவது மேற்பொருள் பொருள் விரும்பாமை. அதனின் மேற்பொருள் பிறர்பொருள் விரும்பாமை - இம் மூன்றாம் நிலைச் சிறப்புப் பொருளே இவ் வதிகாரப் பொருளாக நின்றது, என்க.

விரும்புதல், பொருள் விரும்புதல், பிறன்பொருள் விரும்புதல் ஆகிய இம் மூன்று பொருள்களிலுமே வெஃகுதல் என்னும் சொல் கழக இலக்கியங்களில் வந்துள்ளது. -

1. “விரும்புதல் என்னும் பொருளில் வெஃகுதல் ,

‘ஊரன் தொடர்ஸ்ரீ வெஃகினை ஆயின் - நற் : 290-4 ‘வினை வெஃகி நீசெலின்’ - கலி : 10-21 பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் - அகம் : 112 : 11-12 ‘பொன்கிணர் நறுமலர்ப் புனை வெஃகி’ - அகம் : 126 : 1.5

வேற்கண்ணாள் என்றிவளை வெஃகன்மின் - நாலடி : 17 : 2