பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 அ-2-14 வெஃகாமை 18

பொழிப்புரை : அல்வழிகளில் செல்லும் ஐம்புலன்களையும் நல்வழிகளில் செலுத்துதலால், அவற்றின் ஆளுமையை வென்ற புல்லிமையில்லாத நல்லறிவுடையவர், தமக்கு இல்லையே என்றெண்ணிப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளும் தீச்செயலைச் செய்யார்.

சில விளக்கக் குறிப்புகள் : -

1. புலம் வென்ற புன்மையில் காட்சியவர் - அல்வழிகளில் செல்லும் ஐம்புலன்களையும் நல்வழிகளில் செலுத்துதலால், அவற்றின் ஆளுமையை வென்ற புல்லிமை யில்லாத நல்லறிவுடையவர். புலம் வென்ற மெய், வாய், செவி, மூக்கு, கண் என்னும் ஐம்புலன்களையும், அல்வழிகளில் செல்லாமல், நல்வழிகளில் செலுத்துதலால், அவற்றின் ஆளுமையை வென்ற. - - புலம் மெய், வாய், செவி, மூக்கு, கண் என்னும் ஐம்புலன்கள். - வென்ற வெல்லுதல் செய்த

வெல்லுதல் - இயல்பாகவே ஐம்புலன்களும் கவர்ச்சி நோக்கி,

மனவழிப்பட்டு, அறமல்லாத வழிகளில் செல்லும் திறத்தன.

- புலன்கள் வழிச் செல்லுதலாவது, அவற்றின் நுகர்ச்சியின்பத்தை விரும்பிப் பொருள்வழி அவற்றைப் பெறவேண்டிப், பிறன் பொருளைக் கவர விரும்புதல்.

அவற்றை அவ்வாறு செல்லவிடாமல், அறமான நல்வழிகளில்

செல்லவிடுதலால், அவற்றின் ஆளுமையை வென்ற

அவை அவற்றின்வழிப் போகாமல், தடுத்து நிறுத்தி, நல்வழிகளில் கொண்டு செலுத்துதல், அதன் வழி அவற்றின் ஆளுமையை வெல்லுதல். என்னை? - சென்றவிடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின் பால் உய்ப்பது அறிவு

(422) என்றாராகலின். இதனையே, ‘உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் (24) என்று

முன்னரும் கூறினார். - புலன்களை வெல்லுதலாவது, அவற்றை நல்ல வழிகளில் செலுத்தும்

ஆளுமை பெறுதல் என்னை? தன்வழியில் செல்லும் அடர்த்த குதிரை போன்றவற்றை அடக்கி நல்வழியில் செலுத்துதல் போல, என்க.

- புலன்களை நல்வழிகளில் செலுத்துதலாவது, அவற்றை உழைப்பில்