பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 அ-2-14 வெஃகாமை 18

வெஃகா அறிவுடையார் . பிறன்பொருளைக் கவர விரும்பாத

அறிவுள்ளவர். 3. திறனறிந்து ஆங்கே திரு சேரும் - அவ்வாறான அறிவுள்ளவரின்

நல்திறத்தை அறிந்து செல்வம் அவரிடத்து வந்து தங்கும். - நல்திறன் உள்ளவர் பிறன்பொருளைக் கவரா எண்ணமும் செயலும் உள்ள அறிவாளர் ஆகையால், இயல்பாகவே அவரின் நல்முயற்சியால் விளைவுறும் செல்வம் சிறிது சிறிதாகச் சேர்ந்து அவரிடத்துத் தங்கியிருக்கும். - - எண்ணமும் செயலும் மாறுபாடாக அமையாமையின், இயல்பாகவே அவரிடம் வந்து சேரும் செல்வமும் சிதைவின்றி அவரிடத்து வந்து சேர்ந்து நிலைபெற்றிருக்கும் என்றபடி

‘செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு) உடைத்து - 1 12 - திருசேரும் என்பதைச் செல்வச் செல்வி வந்து சேரும் என்று உருவகமாகத் திறன் அறிந்து ஆங்கே சேரும் என்றார். இஃதொரு பாவியல் நடைமுறை யென்க. பாவன்மைச் சான்றோர். இயற்கை நிகழ்வுகளை இவ்வாறு உருவகப்படுத்தி எழுதுவது இலக்கியங்களிற் பரக்கக் காணப்பெறும் ஒரு செய்தியாம். -

‘படுதிரை கொழிஇய பால்நிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே! - நற்: 49:1-2 பெயல்புறத் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறுஆக நகுமே தோழி நறுந்தண் காரே’ - குறுந்:126: 3-5 மரீஇத்தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது பிரியுங்கால் பிறர்எள்ள, பீடுஇன்றிப் புறம்மாறும், திரு. - கலி:8:12-14 - எனப் பலவாய் வரும் அத்தக உருவகங்களை இலக்கியங்களில்

கண்டுகொள்க. - 4. முன்னைய குறளில் செல்வம் குறையாமைக்குப் பிறன்கைப் பொருள் வெஃகாமை வேண்டும் என்று வழி கூறியவர், இதில் மேலும் செல்வம் சேரும் என்பதற்கும் அவ்வெஃகாமை வேண்டும் என்றதால் அதன் பின்னர் இதை வைத்தார், என்க.