பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

41


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 41

உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல் என்றும் விளக்கம் கூறுவார்.

இவரது சிந்தனைக்கு அடிப்படையாகவே மணக்குடவர், பரிதியார், காலிங்கர் ஆகியோர் உரைகளும் அமைந்துள்ளன.

- இப் பகுதிக்குப் பாவாணர், ஏழேழு பிறவியளவும் என்று உரை கூறிவிட்டு, ஏழுவகைப் பிறப்பிலும் நினைப்பர் என்பது பகுத்தறிவிற்குப் பொருந்தாமையின், ஏழேழ் மக்கள் பிறப்பு என உரைக்கப்ட்டது. அதுவும் உயர்வு நவிற்சியே. ஏழேழு என்பது கழிநெடுங் காலத்தைக் குறிக்க வந்த இருமடி நிறைவெண் என்று விளக்குவார். இவ்வாறு அவர் பிறவிக் கொள்கையை மறுத்தது, அவர் சார்ந்த கிறித்துவ மதத்திற்குப் பிறவிக் கொள்கை இல்லாமையால் இருக்கலாம் என்று கருத இடமுண்டு.

பிறவிகள் உளவா, அவ்வாறு உளவாயிருந்தாலும் ஒவ்வொரு பிறவியிலும் ஒரே மனம் வந்து வாய்க்குமா, அவ்வாறு வாய்த்தாலும் உதவி செய்தவர் மனத்தை உதவி பெற்றவர் உணர வாய்ப்புளதா, அவ்வாறு உணரும்படி அவர்கள் அருகருகாகவும், அண்டை யயலினராகவுமே பிறப்பரா - என்பவெல்லாம் அறிவியலாலும் ஏன் மெய்யறிவியலாலும் மெய்ப்பிக்கப் பெறாத செய்திகள் மட்டுமல்ல, மாந்தவுருவத்திற்கு அமைந்துள்ள எந்த உணர்வுறுப்பாலும், அறிவுறுப்பாலும் அறிந்து கொள்ளவே முடியாத செய்திகள் என்க! இவை மதவுணர்வாளர்களாலும், போலி மெய்யுணர்வாளர்களாலுமே கூறப்பெறுகின்ற செய்திகளாக உள்ளன. - * . . . .

மேலும், பிறவிக் கொள்கைக்கு உணர்வியல் அடிப்படையிலும், பொருள் (Matter), ஆற்றல் (Energy) என்னும் பூதவியல் அடிப்படையிலும் ஓரிரு வாய்ப்புகள் உளவாகத் தெரிந்தாலும், அவற்றை ஆய்வளவில் மெய்ப்பிப்பது கடினம். இது தொடர்பாகப் பல நூறு ஆவியியல் நூல்கள் வெளிவந்துள்ளன; வெளிவந்து கொண்டும் உள்ளன. ஆனால் அவற்றிலெல்லாம் கூறப்பெறுகின்ற நிகழ்ச்சிகளுக்கும் பதிவுகளுக்கும் இன்றுவரை அறிவியலாரின் எவ்வகை ஏற்பிசைவும் (அங்கீகாரம்) கிடைக்கவில்லை: ‘. . . . . . .

தமிழியலில் கூறப்பெறும் உயிரியலுக்கும், ஆவியியலுக்கும் பெருத்த

கூறப்பெறும் உயிரியல் கொள்கைகூட நூலாசிரியர் கொள்கையாகத்தான் இவ்வுரை நூலுள் குறிப்பிடப் பெறுகின்றனவே தவிர, உரையாசிரியர் கருத்தர்கக் கொள்ள வேண்டும் என்பதாக எவரும் கருதிக் கொள்ளக் கூடாது. .

மெய்ப்பொருள் தொடர்பான் கருத்துகள் உள்ளுன்ர்வுக் கருத்துகளே (Intuition). அவை முழுவதும் இப் பிறவித்