பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

43


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 43

இப்பொழுதைய நிலையில் இந்த அளவே எவராலும் கூறுதற்கியலும், இதற்குமேல் கூறுவதெனில் அது மதம் ஆகிவிடும். மதவியல் மாந்தவியலுக்குத் தேவையான கலை, கற்பனை போன்றதே தவிர உண்மையில்லை என்பது வெளிப்படை கலை என்பது அறிவியலுக்கு Grortraorgi (Art is the opposite of Science) grgrl JG5 Glupus.

இக் குறட்பாவுள், தாம் வீழ்ச்சியடையுமாறு தமக்குள்ள துன்பத்தை நீக்கியவரைத் தாம் மட்டுமன்றித் தம் வழிமுறையினரும் உணர்ந்து

போற்றுவர் என்னும் தொடர் நன்றியுணர்வைப் புலப்படுத்தினாராகலின் முன்னதன் பின் இது வைக்கப் பெற்றதாம் என்க.

க0அ. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று. - #08 பொருள்கோள் முறை இயல்பு -

பொழிப்புரை: ஒருவர். செய்த உதவியை (எந்த நிலையிலும்) மறந்து விடுவது நன்மையாகாது; அதேபோல் அவரோ பிறரோ அறியாமையால் செய்த நல்லதல்லாததை நினைவில் வைக்காது அப்பொழுதே மறந்து விடுவதும் நன்மை பயப்பதாகும். சில விளக்கக் குறிப்புகள்: -

1. நன்றி மறவாமையையும், நன்றல்லதை உடனே மறந்து விடுவது பற்றியும் கூறுவது இப் பாடல். ...

2. நன்றி மறப்பது நன்றன்று - ஒருவர் செய்த உதவியை, எந்த நிலையிலும் மறந்து விடுவது நன்மையாகாது.

- ஒருவர் செய்த உதவியை எண்ணியிருத்தல் வேண்டும் என்னும் அதிகாரப் பொருளை வலியுறுத்துவதாகும் இக்குறள், !

- ஒருவர் செய்த உதவியை மறப்பது எண்ணிப் பாராமல் தவிர்ப்புது என்பது இயல்பாலும், சூழலாலும் நேர்வது. அஃது உலகியல் இயல்பால் மறந்துவிடுவதற்கு அன்பில்லாமை, பொறாமை, வெறுக்கை முதலிய மன்வேறுபாடுகள் காரணமாகும் என்க.

- தமக்கு ஒருவர் பொருளானும் செயலானும் உதவும் பொழுது,