பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அ-2-8 நடுவு நிலைமை - 12

- அவ்வாறு ஒழுகப் பெறாமலிருப்பின் இவ்வறம் ஒர் இழிவான, போலியான, பொய்ம்மையான நிலைக்கு உள்ளாகி விடும் என்னும் குறிப்புணர்த்தினார்.

- உலகில், பெரும்பாலார் நடுவுநிலை உணர்வைக் கடைப்பிடித்து ஒழுகுவதுபோல் நடிப்பதால், இவ் வறவுணர்வு உண்மையான பயனைத் தராது மக்கள் இடர்ப்பட ஏதுவாகின்றது. எனவேதான் பகுதியால் பால்பட்டு ஒழுகப் பெறின் மிக நன்மை விளையும் என்னும் கருத்து இவ்வாறு உணர்த்தப் பெற்றது, என்க.

ககஉ. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - 112

பொருள்கோள் முறை இயல்பு

பொழிப்புரை எந்நிலையிலும் நடுவுநிலையைக் கடைப்பிடித்து ஒழுகுவான் தன் முயற்சியால் பெற்ற செல்வம், பலவாறும் சிதைந்துபடாமல், அவனுக்கும் அவனது பிறங்கடைக்கும் பயனையும் வலிவையும் உண்டாக்கும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. செப்பம் உடையவன் ஆக்கம் - எந்நிலையிலும் நடுவுநிலையைக் கடைப்பிடித்து ஒழுகுவான் தன்னுடைய முயற்சியால் பெற்ற செல்வம்

- உழைப்பால் ஆக்கப் பெறுதலின் ஆக்கம் செல்வமாயிற்று.

இருபுறத்தும் செம்மையாக நிற்றலால் செப்பம் நடுவுநிலையைக்

செப்பம் உடையவன் தன் முயற்சியால் செல்வத்தை உருவாக்குவானாகலின், அதனை ஆக்கம் என்று குறித்தார். 2. சிதைவின்றி நேர்மையானும் நல்வழியானும் தன் உழைப்பானும் வந்த செல்வமாகலின், அல்வழியானும் பிறர் கொள்வழியானும் அழிக்கப் பெறாதாகலின் சிதைவின்றி என்றார் சிதைவு - சிதர்வு. சிற்சிறிதாக அழிதல். r 3. எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - அவனுக்கும் அவனது பிறங் கடைக்கும்

பயனையும் வலிவையும் உண்டாக்கும்

- உம் தொக்கு நின்று அவனுக்கும் என்று பொருள் தந்தது.

எச்சம் - அவனுக்குப் பின் எஞ்சி நிற்பது பெயர், புகழ், பொருள், பிறங்கடை அனைத்தையும் குறிக்கும்.