பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O அ-2-8 நடுவு நிலைமை - 12

2. இதில், அப் பொருள்நிலை ஆட்சிக்குப் பெரிதும் ஆட்பட்ட தொழிலியல் கூறுகளில் முகாமையாகியதான வாணிகத்தைச் சான்றாக எடுத்துக் காட்டி, நடுவுநிலையைப் பெரிதும் அசைவுறச் செய்யும் தன்மைகள் அதில்தான் மிகுதியும் உள்ளதைச் சுட்டி, அதில் எவ்வாறு நடுவுநிலை பேணிக் காக்கப் பெறல் வேண்டும் என்பதை, ஒரு சோற்றுப் பதமாக உலகியலுடன் பொருத்திக் கூறுவார்.

உலகில் உள்ள மக்களில், பெரும்பாலும், பத்தில் ஒரு பங்கினரே, எப்பொழுதும் ஆட்சி, அதிகாரம், ஆளுமை போன்ற செயல்நிலைகளில் ஈடுபட்டுள்ளனர்; பத்தில் இரண்டு பங்கினர் உழவாண்மையில் ஈடுபட்டு உணவுத் தேவைகளை நிறைவேற்றுதலில் உழைத்து வருகின்றனர்; இரண்டரைப் பங்கினர் அனைத்து நிலைகளிலும் கீழ்நிலை உதவியாளர்களாக இருந்து பணியாற்றுகின்றனர்; பத்தில் ஒர் அரைப் பங்கினர் படை, காவல், பாதுகாப்பு முதலிய பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர்; பத்தில் மேலும் ஓர் அரைப் பங்கினர் கல்வி, அறிவு, தொழில், அறிவியல் முதலிய நிலைகளில் ஈடுபட்டுள்ளனர். மிகுதியுள்ள பெரும்பான்மையான மூன்றரைப் பங்கினர் முழுவதுமாகச் சிறிதும் பெரிதுமான பல்வேறு வகைப்பட்ட வாணிக நிலைகளில்தாம் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், உலகின் பொருளியல் நிலையே இவர்கள் கைகளில்தாம் உள்ளன என்பதையும் நாம் முதலில் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். - .

எனவே, உலகின்கண் ஏதோ ஒருவகையில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வாணிகர்களே மிகுதியாம் என்க. -

இவ்வுண்மையினை ஒரளவு பட்டறிவானும் மெய்யறிவானும் உணர்ந்திருந்த ஆசிரியர், நடுவுநிலைமையுணர்வு பெரிதும் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வாணிக மாந்தர்களையே வழக்குக்கு முன்னிறுத்தி, இவ்வுணர்வினை அவர்களே பெரிதும் நிலைநாட்டக் கடமைப்பட்டவர்களாக அறிமுகப்படுத்தி, அவர்களது நிலையின்கண் அவ்வுணர்வு கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும் என்பதை இங்கெடுத்துக் காட்டி வலியுறுத்தினார் என்க. மற்று, பிறர் பிறர் நிலையில் இவ்வுணர்வு நிலவொளி நிழல் போலவும், நீருள் நிழல் போலவும், நிழலுள் நிழல் போலவும் எளிதின் விளங்காதாகையால், அதனை எடுத்துக் காட்டாகக் கொண்டு இவ்வுணர்வினைத் தொடுத்துக் காட்டுதல் அரிது. ஆகையால், அவர்தம் நிலையில் இவ்வுண்மையைக் காட்டிலராம் என்றும் தெளிக. . . - மிகப் பெரும்பாலார்க்கு நடுஉநிலையுணர்வு என்று ஒன்றிருப்பதாகவே அறிய வாய்ப்பில்லை என்க. எனவே அது பற்றி அவர்கள் சிறிதும் உணர்வதிலர். இஃது இறைமையுணர்வின் முதன்மைநிலை உணர்வாதலின் அதனை இங்குத் தெள்ளிதின் உணர்த்தினார் என்க.