பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

81


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 81

3. பேணிப் பிறவும் தமபோல் செயின் வணிகர்கள், ஒரு பொருளை வாங்குதல் முதல் அதை விற்பனை செய்யும் வரையும், அப் பொருளையும் அது தொடர்பான பிற நடைமுறைகளையும் தமக்காகத் தாம் நடந்துகொண்ட முறைபோலவே, நடுஉநிலையுணர்வோடு செய்வார்களாயின்.

- பிறவும் தமபோல் பேணிச் செயின் என்பதற்குப் பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணிச் செயின் என்றே பரிமேலழகர் பொருள் கொண்டு, பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் (பட்டினப் பாலை 209, 210 என விளக்கமும் கூறினார்.

பிறவும் என்னும் சொல்லுக்குப் பிறர் பொருளையும் என்று அவர் பொருள் கண்டுள்ளார்.

- இதில் பிறர் பொருள் என்பது என்ன, அஃது எங்கு எப்படி என்பது தெளிவாக விளங்குமாறு இல்லை. ஒருவேளை தாம் வாங்கி விற்க வேண்டிய பொருளைத்தான் பிறர்பொருள் (பிறர்க்கு உரிய பொருள்) என்று குறிப்பிடுகின்றாரோ, தெரியவில்லை. -

- இவரைப் போலவே உரையாசிரியர் பலரும் பிறவும் என்பதற்கு அவ்வாறே பொருள் கண்டுள்ளனர்.

- பேணிப் பிறவும் என்று வருவதை, பிறவும் தமபோல் பேணிச் செயின் என்று கொண்டு கூட்டிப் பொருள் கண்டதால், பிறவும்’ என்பதற்குப் பிறர் பொருள்களையும் என்று பொருள் கொள்ள வேண்டுவதாயிற்று. -

- பாவாணரும் இவ்வாறே கொண்டு, இவ்வாறே பொருளும் கண்டுள்ளார். - -

- இது பிழை. • * - - பேணிப் பிறவும் தமபோற் செயின் என்றே இயல்பாகப் பொருள் கொள்ளும் பொழுதே சரியான பொருள் கிடைப்பதை ஒர்ந்து உணர்தல் வேண்டும். -- * . . . .

- இவ்வாறு இயல்பாகவே தொடர்வழிப் பொருள் கொண்டால், ‘வாங்கிய பொருள்களை அவை விற்குந்துணையும் பேணிப் பிற செயல் நடைமுறைகளையும் தாம் வாங்கும் பொழுது செய்தது போலவே செய்யின் என்று பொருள் வரும். இதுவே சரியாக உள்ளது பற்றி முன் விளக்கத்தில் கூறப் பெற்றது. இப்பொருள் உரையாசிரியர் எவராலும் குறித்திராத ஒன்று. -

- பேணுதல் - காத்தல். என்ன காத்தல்?

பிறர்க்கு விற்பதற்காக வாங்கிய பொருள்களை அவை விற்கப் பெறும்வரை, தாம் வாங்கும் பொழுது, விலை, புதுமை, பயன்படுதன்மை