பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

அ-2-18 ஒப்புரவறிதல் 22



நயன் : ஞாயம், நடுநிலை உணர்வு.

- ஒப்புரவுணர்வுக்கு தடுநிலை உண்ர்வு மிகுதேவை யாகலின், அஃதுடையான் என்றார்.

- பிறர்க்கும் தனக்கும் உள்ள பொதுநிலைத் தேவைகளைப் பொது நல உணர்வுடன் ஒரு நடுநிலையாளன்தான் சரியாகச் சிந்திக்கமுடியும்.

- பாவாணர் இதனை நேர்மை என்றார். நேர்மைக்கும் நடுநிலை உணர்வே அடிப்படை என்றார்.

படுவது - வந்து படிவது, சேர்வது. உழைப்பான் வந்து சேர்வது.

படின் வந்துசேரின்.

2) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் : எல்லார்க்கும் பயன்தரும் நன்மரம் ஒன்று ஊரின் நடுவில் பழுத்து நின்றது போலாம் என்க.

- பயன்மரம் - பயன்தரும் நன்மரம் பயன் பொதுவாகையால், எல்லார்க்கும் என்பது வருவிக்கப் பெற்றது.

உள்ளூர் - ஊர் உள். ஊர் நடுவில் 'இல்வாய்’ என்பது 'வாயில்' என்றானாற் போல்.

- இஃது இலக்கணப் போலி.

பழுத்தற்று: பழுத்ததுபோல்.

- பழுத்து நின்றாற் போல்.

- நன்மரம் காய்த்தது மட்டுமன்று, உடனடிப் பயனுக்கு உதவுவதால், பழுத்தது போல் என்றார்.

- இதிலும் முன் குறளில் கூறியதுபோல் பயன் எளிமையும் பயன் பொதுமையும் புலப்படுத்தினார், என்க.

- மரம் என்றதால் பயன்படுநிழலும் குறித்தார், என்க.

- இக்கருத்துக்கு நேர் எதிரான ஒரு கருத்தை, நன்றியில் செல்வம் அதிகாரத்துள் கூறுவார். அது,

'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று’ - 1008

- என்பது.

- இங்குப் பயன்மரம் என்றவர், அங்கு நச்சுமரம் என்று கூறிய நயம் உணர்ந்து மகிழ்தற்குரியது.