பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

191



‘முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்' - 708

2. இரக்கப் படுதல் இன்னாது : இரக்கப்பட்டுக் கொடுப்பதும் துன்பம் தருவதே.

இரக்கப்படுதல் இன்னாதென்றது. வேண்டியவர் தேவைக்கும். அவர் :முக மலர்ச்சி அடையுமாறும் ஈதல், தன் உடைமை முழுவதும் :தீர்க்குமாறு இருப்பின் கொடுப்போன் அடைவது துன்பமே என்க.

இவ்விடத்துப் பரிமேலழகர் 'எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது' என்பார்.

-இஃது, அத்துணைச் சரியன்று. ஆசிரியர் கருத்தும் அதுவன்று.

- 'கரும்பு சுவையுள்ள தென்று வேருடன் பிடுங்குவதா?' 'கீரையைத் :தழையரியாது வேருடன் பிடுங்குவதா?' 'தனக்கு மிஞ்சித்தான் தான 'தருமம்' வித்துக் குற்றி உண்பதா? என்னும் வழக்குப் பழமொழிகளை ஒர்க,

- தன்னை இழக்கின்ற அளவுக்கு ஈகை செய்வது கூடாது என்பதே ஆசிரியர் கருத்தாம் என்க. என்னை?

ஆற்றின் அளவறிந்து சக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி’ - 477

‘உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும் – 480

என்பார் ஆகலின்.

 ‘ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா' - இன்னா:21:1

என்றார், பிறரும்.

3) இதில், 'இரக்கப்படுதலும்' 'அளவும்' என்று வந்திருத்தல் வேண்டும். இரண்டு 'உம்'மைகளும் செய்யுள் திரிபால் தொக்கி நின்றன.

4) சென்ற குறளில் கூறப்பெற்ற குலனுடையான் கண் உள்ள ஈதற் குணமும் அளவிறந்து செல்லுதல் வோனுக்குத் துன்பம் தருவதாகும் என்று எச்சரிக்கையாக இது கூறியதால், அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது.