பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

205


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 2O5

‘இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் கருகென விழையாத தாவில் நெஞ்சத்துப் பகுத்துண் தொகுத்த ஆண்மை

பிறர்க்கென வாழ்திநீ - பதிற்று:38:15-18. 2) பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது : பசி என்னும் தீய பிணி

அண்டுவதில்லை.

முன் குறளில் அழிபசி என்றவர் இதில் அதனைத் தீப்பிணி என்றார். தீப்பிணி தீய பிணி, உடலை எரிக்கும் தன்மையுள்ள தீப் போன்ற பிணி. - மேலும் பசி உடலைத் தீய்த்து உள்ளத்தைத் தீய்த்து அறிவையும்

தீய்க்குமாகலின் தீப்பிணி என்பது பொருந்துவதாகும். - எல்லாரும் கூடி ஒருங்கிருந்து பகிர்ந்து உண்ணும் பண்பு வழக்கம் உள்ள ஒருவன், பசித்திருக்கையில் அவ்வெல்லாருமே கூடி அவனை ஆதரித்து, அவன் வறுமையைப் போக்க உதவுவார்களாகையால், அவனைப் பசிப்பிணி தீண்டல் அரிது என்றார். - இதேபோல், விருந்தோம்பல் அதிகாரத்தும் நாளும் விருந்தோம்புவான் வாழ்க்கை வறுமையால் வாடுவது இல்லை என்னும் பொருள்படுமாறு,

‘வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று’ - 83

(பருவரல் - துன்பம் - வறுமைத்துன்பம்) - என்று கூறினார். இதன் விளக்கம் அங்குக் காண்க - இனி, இவைபோலும், சில நல்லுணர்வுகளைக் கொண்டவர்களைத்

துன்பம் வந்து நெருங்குவதில்லை என்பதை வேறு சில இடங்களிலும் ஆசிரியர் உணர்த்துவார். அவை:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல . - 4 ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்’ - 34.1 ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்’ - 429

‘இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்’ . . .”... - 628