பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

அ-2-20 புகழ் -24


222 அ-2-20 புகழ் 24

கழக இலக்கியங்களுள் வரும் காட்டுகள் சில:

‘சீர்கெழு வியன் நகர்’ - நற்:339:6 ‘தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையை நின்சீர் நிரந்து ஏந்திய குன்று’ - Uff:18:5 ஆனாச் சீர்க் கூடல்’ - கலி:30:11 ‘வாடாச் சீர்த் தென்னவன்’ - கலி:104:4 ‘விழவுடை விழுச்சீர் வேங்கடம்’ - அகம்:61:13 ‘பெருஞ்சீர் அன்னி’ - அகம்:145:10 “சிர் கெழு வியன் நகர் - அகம்:219:1 ‘சீர் மிகு பாடலி’ - அகம்:265:5

4) சீர்த்தி: வழக்கு சீர்த்தி பெறுதல், சீர்த்தி உடையவன்.

விளக்கம்: சீர் என்னும் பகுதியடியாக விரிந்தது. சீர்த்தி - புகழ், மிகுபுகழ்.

. இச்சொல் இந்நூலுள் இல்லை. கழக இலக்கியங்களுள்ளும் பெரும்பாலும் “சீர் என்னும் சொல்லே மிகுதியாக பயன்படுத்தப் பெறுதலும், சீர்த்தி குறைவாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளதும், இது பிந்தித் தோன்றிய வழக்காக இருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு. ஆனால் தொல்காப்பியத்துள் இதன்வழக்கு உண்டு.

- கழகப் பயன்படுத்தங்கள்:

‘வலம்படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து - பதிற்று:41:24 அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை’ - புறம்:15:18 ‘. . . . . . . . . . . . . . . உயர்சீர்த்தி ஆலமர் செல்வன் அணிசால் மகன் விழாக்

கால்கோல்’ - கலி:83:13-115 ‘சீர்த்தி மிகுபுகழ்’ - தொல்:796 ‘சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்’ - தொல்:1087:9

5) கீர்த்தி: வழக்கு: அவன் கீர்த்தியுடையவன்.

விளக்கம்: சீர்த்தியே தலைதிரிந்து “கீர்த்தி என்று வழங்குகிறது.

இச்சொல் கழநூல்களுள் இல்லை.

- மிகவும் பிற்கால வழக்கு பிற்காலச் சமய நூல்களுள்ளும் இதிகாச பாவியங்களாகிய கம்பஇராமாயணம்’, ‘வில்லிபாரதம் முதலிய நூல்களுள்ளும் வழங்குகிறது.