பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

அ-2-20 புகழ் -24


260 அ-2-20 புகழ் 24

உச0. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர். - 240

பொருள்கோள் முறை இயல்பு.

பொழிப்புரை ஒருவர் வசையில்லாத புகழ்பெற்று வாழ்வதனால்தான் வாழ்பவர் என்னும் பெருமை பெறுவார். புகழ் இல்லாமல் வெற்று வாழ்க்கை நடத்துபவர் வாழ்ந்தும் வாழாதவரே.

சில விளக்கக் குறிப்புகள்:

வசைபொழிய வாழ்வாரே வாழ்வார் : ஒருவர் வசையில்லாத புகழ்பெற்று வாழ்வதனால் தான் வாழ்பவர் என்னும் பெருமை பெறுவார்.

வசையொழிய வசையில்லாத புகழ்நிலை.

வாழ்வாரே வாழ்வார். புகழ்பெற்று வாழ்வதனால்தான் வாழ்பவர் என்னும் பெருமை பெறுவார்.

அவர்தாம் வாழ்வாங்கு வாழ்பவர் ஆவார். என்னை?

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்’ - 50 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று’ - 78 ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ - 479 ‘மருந்தோமற்று ஊன் ஒம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து’ - 968

- என்றார் ஆகலின்,

‘ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும்

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார். - பரி. திரட்டு:12:1-3

- என்றார் பிறரும்.

2 இசையொழிய வாழ்வாரே வாழாதவர் புகழ் இல்லாமல் வெற்று வாழ்க்கை

நடத்துபவர் வாழாதவரே.

இசை ஒழிய புகழ் இல்லாமல். - - புகழ்க்குரிய ஈகை, தொண்டு, அருஞ்செயல், கல்வி, வீரம் முதலியவற்றுள்