பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 35.

உள்ளன. அவை யாவும் பல பல வகையில் இன் பத்தை ஊட்டுகின்றன. ★

குரல் ஆ : திருக்குறளின் கவி நயத்தை ஒருவாறு அறிந்து கொண்டோம். அதன் பெருமையை உணர்ந்து தமிழ்ப் புலவர்கள் தம் நூல்களிலே பாராட்டியது உண்டா?

குரல் அ: எத்தனையோ விதமாகப் பாராட்டியிருக் கிறார்கள். குறளை அப்படியே எடுத்துவைத்து அழகு செய்திருக்கிறார்கள். அதன் கருத்தை விரித்துத் தங்கள் பாடலிலே பொருத்தியிருக்கிறார்கள். நாம் இப்போது சிறிது மணிமேகலை ஆசிரியராகிய சாத்தனாரோடு காவிரிப்பூம்பட்டினத்துக்குப் போக லாம். .

(மாற்றம்.)

ஒரு குரல் : அதோ போகிறாளே, அந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள் !

வேறு குரல்: தூயவனாகிய கந்தனுக்குப் பிள்ளை யாகப் பிறந்து அயல் மகளிரைக் கண்டு ஏதோ பேசுகிறாயே! . . . . .

முன் குரல்: போடா போ! கண்ணை மூடிக்கொண்டு நடக்கச் சொல்லுகிறாயா? இந்தக் காவிரிப்பூம் பட்டினத்தில் இப்படி ஒரு பேரழகியை நான் கண்டதே இல்லை. . . . .

பின் குரல்: அவள் மருதி என்ற பெயரை உடையவள், காவிரி நீர் ஆடிவிட்டுப் புனிதமாகச் செல்கிறாள். அங்கே பார்க்காதே; வா போகலாம்.