பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 திருக்குறள் விளக்கு தலவி : இரவு முழுதும் அவரோடு பேசிக்கொண் டிருந்தேன். போன இடத்தில் அவர் என்னையே நினைத்துக்கொண் டிருந்தாராம். நல்ல உணவு உண்ணும்பொழுது நான் இல்லையே என்று நினைத் தாராம். அழகான காட்சிகளைக் காணும்போது உடன் இருந்து கண்டு இன்புற நானும் அங்கே இல்லையே என்று வருந்தினராம். போன இடத்தில் கண்டதையும் கேட்டதையும் சொன்னர். இரவு நேரம் போனதே தெரியவில்லை. தோழி: நன்ருயிருக்கிறது போ! அவர் வரவில்லை யென்று நீ துன்புற்ருய் முன்பு. இப்போது அவர் வந்துவிட்டாரென்று மகிழ்கிருய். ஆளுல் உன் கண்களுக்குமட்டும் எப்போதும் சங்கடந்தான் போலிருக்கிறது! அவர் வரவில்லையென்று அவை முன்பும் தூங்கவில்லை; இப்போதோ அவர் வந்து விட்டாரென்று தூங்கவில்லை.

(தலைவியும் தோழியும்

சேர்ந்து சிரிக்கிரு.ர்கள்.)

(மாற்றம்.) ★ . குரல் அ: இந்த அழகிய காட்சியை இரண்டே அடி

களில் காட்டிவிட்டார் வள்ளுவர். வேறு குரல்: (பெண் குரல் பாடுகிறது.)

வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ; ஆயிடையே ஆர்அஞர் உற்றன. கண்.' - குரல் அ: இப்படி, காமத்துப்பாலில் இருபத்தைந்து அதிகாரங்களில் இருநூற்றைம்பது பாடல்கள்

1. குறள், 1179.