பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 33

தலைவி: ஆம்; அவர் வராவிட்டால் இந்தக் கண் தூங்காது போல் இருக்கிறது.

(குதிரை வண்டியின் சத்தம்.)

தோழி: இதோ அவர் வந்துவிட்டார்போல் இருக் கிறது. நெடுநாளாகப் பிரிந்தவர் வருகிறார். நான் இங்கே தடையாக இருக்கமாட்டேன். நாளைக்கு வருகிறேன்.

(மாற்றம்.)

★ (கோழி கூவுகிறது.)

தலைவன் : சிறிது வெளியே போய்விட்டு வருகிறேன்.

தலைவி: விரைவில் வந்துவிடுங்கள்.

தலைவன்: மறுபடியும் ஊருக்குப் போய்விடுவேன் என்றா நினைக்கிறாய்? (சிரிப்பு)

(செருப்பின் ஒசை - தொடர்ந்து காற்சிலம்பின் ஒசை.)

தலைவி : வா, வா தோழி! அவர் வந்துவிட்டார்,தெரியுமோ?

தோழி: அதுதான் நேற்றே தெரியுமே! இப்போது எவ்வளவு பூரிப்புடன் இருக்கிறாய் தெரியுமா ? இதென்ன உன் கண் கலக்கம் மட்டும் போகவில்லையே!

தலைவி : அதற்கு என்ன செய்வேன்? இரவெல்லாம் தூக்கம் இல்லை.

தோழி: என்னடி இது? அவர் வராதபோது இரவு முழுவதும் தூக்கமில்லை யென்றாய். கவலைப் பட்டதனால் தூங்காமல் இருக்க நியாயம் உண்டு. இப்போதுதான் அவர் வந்துவிட்டாரே! உனக்கு என்ன கவலை ?

தி.வி.-3