பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

கஞ்ச யோனி உதிக்கின்ற நாடு

கமலை வாணி துதிக்கின்ற நாடு செஞ்சொல் மாமுனி ஏகிய நாடு

செங்கண் மால்சிவன் ஆகிய நாடு வஞ்சி பாகர் திரிகூட நாதர்

வசந்த ஆரிய நாடெங்கள் நாடே. 6 (7) மாதந் தவறாமல் மூன்று மழை பொழிகின்ற நாடு; வருடம் மூன்று போகங்கள் வீதம் விளைகின்ற நாடு; வேதங்களே வேர், மரம், பயன் என மூன்றாகவும் அமைந்த குறும் பலா மரத்தினை உடைய நாடு; நித்தியம், நைமித்திகம், காமியம் ஆகிய மூவகைச் சிறப்புகளும் தவறாமல் நிகழ்கின்ற நாடு; பிறப்பு, வாழ்வு, இறப்பு என்னும் மூன்று நிலைகளினும் நன்மை விளைவிக்கும் சிவநாடு; மூன்று புவனங்களாகிய மேல், நடு, கீழ் ஆகியவற்றில் உள்ளாரனை வரும் வலஞ்செய்து போற்றும் நாடு; நாத தத்துவத்தின் மெய்ப் பொருளாக, அரி, அயன், அரன் என மூன்றுருவாக விளங்கும் குற்றால நாதரின் ஆரிய நாடே எங்கள் நாடாகும்.

மாதம் மூன்றும் மழையுள்ள நாடு

வருடம் மூன்று விளைவுள்ள நாடு வேதம் மூன்றும் பலாவுள்ள நாடு

விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு போதம் மூன்றும் நலம்செயும் நாடு

புவனம் மூன்றும் வலஞ்செயும் நாடு நாதம் மூன்றுரு வானகுற் றால -

நாதர்ஆரிய நாடெங்கள் நாடே. 7 (8) இந்நாட்டினை வந்து சேர்ந்திருப்பவர்கள் தங்களிடம் இருந்து போய்விடக் காண்பதெல்ல. ம் தம்மிடமுள்ள பாவங்களேயாகும். இந்நாட்டிலே எம்மருங்கும் நெருங்கிக் கிடக்கக் காண்பதெல்லாம் வயல்களிலேயுள்ள கரும்பும் செந்நெல்லுமேயாகும். இங்கே தொங்கிக் கொண்டிருக்கக் காண்பதெல்லாம் மாம்பழக் கொத்துகள்தாம்.இங்கே சுழன்று கொண்டிருக்கக் காண்பதெல்லாம் தயிர்கடையும் அழகிய