பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 1.01

(ஆகு - பெருச்சாளி. மகபதி - வேள்விகட்குத் தலைவன்; இந்திரன். கானமலர் - மணமுள்ள செந்தாமரை மலர்)

பொன்னுலகம் எனப்படும் தேவலோகத்திலே யுள்ளவரான வானவர்களுக்கும், மண்ணுலகத்தவரான உயிர் இனங்களுக்கும், இப் பூமியின் கண்ணேயுள்ள தவசிகளான முனிவர்களுக்கும் பாதலத்திலே இருப்பவரான நாகர் களுக்கும், அன்னத்தின் வடிவினை எடுத்தவராகிய அயனுக் கும் பன்றியின் உருவினை எடுத்தவராகிய திருமாலுக்கும் மற்றும் இவரல்லாத பிறர் அனைவருககும் முன்னரே தோன்றிய செல்வர் இவர் என்றறிவாயாக. இப்படி இவர் களுக்கெல்லாம் முற்படத் தோன்றி வந்தவரைத் தமையனார் என்றும் சொல்லுவார்கள். அப்படிச் சொன்னாலும் சொல்லலாம். அதனாலும் ஏதும் பழுது இல்லை. நன்மை பொருந்திய இத் திருக்குற்றால நகரிலே கோவில் கொண்டிருக்கிற பெருமானின் கிளைவளத்தினை நான் எடுத்துச் சொல்வது என்பது அரிதாகும். உலகமெல்லாம் அதனை உரைத்துக் கொண்டிருக்கும். அதனைக் காண்பாயாக அம்மையே!

பொன்னுலகத் தேவருக்கும் மண்ணுலகத் தவர்க்கும்

பூதலத்தின் முனிவருக்கும் பாதலத்து ளார்க்கும் அன்னவடிவு எடுத்தவர்க்கும் ஏனஉரு வார்க்கும்

அல்லார்க்கும் முன்னுதித்த செல்வர்காண் அம்மே! முன்னுதித்து வந்தவரைத் தமையனென உரைப்பார்

மொழிந்தாலும் மொழியலாம் பழுதிலைகாண் அம்மே! நன்னகரிற் குற்றால நாதர்கிளை வளத்தை

நானுரைப்ப தரிதுலகந் தானுரைக்கும் அம்மே! 12 (அல்லார் - பிற தேவர்களும் கடவுளர்களும். செல்வர் - பெருமானார். பூதலம் - பூஉலகம். பாதலம் - பாதாள உலகம்)

15. குறியின் தன்மையாது? 'நீரிலே வளர்கின்ற செம்பவளத்தைப் போன்ற திருமேனி வண்ணத்தையுடையவர்; இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவரான நின்மலர்; குற்றால நாதர். அவருடைய