பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

மிகுதியான பெருமைகளையெல்லாம் பாடி ஆடிவருகின்ற குறவஞ்சிப்பெண்ணே! கேட்பாயாக கார்மேகத்தைப் போன்ற கூந்தலையுடைய நங்கைமார்களுக்கெல்லாம் விருந்து போல இனிக்கும்படியாக நீ ஆராய்ந்து சொல்லுகின்ற சிறப்புமிகுந்த குறியின் தன்மைகளை எல்லாம், நானும் தெரிந்து கொள்ளு மாறு சொல்லுவாயாக (என்று வசந்தவல்லி குறவஞ்சியிடம் கேட்டாள்.) r

விருத்தம் நீர்வளர் பவள மேனி

நிமலர்குற் றால நாதர் கூர்வளம் பாடி யாடும்

குறவஞ்சிக் கொடியே கேளாய் கார்வளர் குழலார்க் கெல்லாம்

கருதிநீ விருந்தாச் சொல்லும் சீர்வளர் குறியின் மார்க்கம்

தெரியவே செப்பு வாயே. (விருந்தாகச் சொல்லும் - புதுமையாகச் சொல்லும். சீர்வளர் குறி - சிறப்பு மிகுந்த குறி)

16. குறியின் சிறப்புகள்! மிகவும் வித்தாரமானது எனது குறி அம்மையே! மணியாரத்தினையும் முத்தாரத்தினையும் பூணுகின்ற, மேலெழுந்து முகிழ்த்திருக்கும் கொங்கைகளையுடைய பெண்ணே! என் குறியானது மிகவும் வித்தாரமானது அம்மையே!

வஞ்சிநாடு,மலையாள நாடு,கொச்சி நாடு,கொங்குநாடு, மக்கம், மராடம்,துலுக்காணம் ஆகிய நாடுகளில் எல்லாம் என் குறியினைப் பலரும் பாராட்டியுள்ளனர். செஞ்சி, வடகாசி, பரந்த, சீனநாடு, சிங்களம், ஈழம், கொழும்பு, வங்காளம், தஞ்சை, திருச்சிராப்பள்ளிக் கோட்டை, தமிழ்ச் சங்கம் வீற்றிருந்த மதுரை, தென்மங்கலப் பேட்டை ஆகிய பலவிடங்களிலும் மிகுதியாகக் குறிசொல்லிப் பேரும்