பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 119

வசந்த வல்லியானவள், முகத்திலே நாணங் கொண்டு தலை கவிழ்ந்தாள். நன்னகரிலேயுள்ள ஈசர் உன்னை அணைவதற்கு விரைவிலேயே வரப் போகிறார். இந்த நாணத்தின் வயண மெல்லாம் நாளைக்கு நானும் காணத்தானே போகிறேன். ஒரு கைந்நொடி நேரத்திற்குள்ளாக உனக்குப் பொன்னிறமுடைய கொன்றைப்பூ மாலை உன் தோழியின் மூலம் வந்துவிடுவதைக் காண்பாயாக இனி மேல், உன் வெட்கத்தை எல்லாம் கக்கத்தில் இடுக்கிக் கொள்வாயோ அம்மே? இப்படிக் குறவஞ்சி கேலி பேசினாள். அதனைக் கேட்டதும் மனங் களிப்புற்ற வசந்தவல்லியானவள், தான் தேடி வைத்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் அந்தக் குறவஞ்சிக்குப் பூட்டி, அவளை மகிழ்வுடன் அனுப்பி வைத்தாள்.

கண்ணிகள் மன்னர்திரி கூடநாதர் என்னும் போதிலே - முகம்

மாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள் 1 நன்னகரில் ஈசருன்னை மேவவருவார் - இந்த

நானமெல்லாம் நாளைநானும் காணவே போறேன் 2 கைந்நொடியில் பொன்னிதழி மாலைவருங்காண் - இனிக்

கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே 3 என்னுமொரு குறவஞ்சி தன்னை அழைத்தே - அவட்கு

ஈட்டுசரு வாபரணம் பூட்டினாளே. 4 இத்துடன், குறவஞ்சியிலே வசந்தவல்லிக்கு முதன்மை யான பகுதி முடிகிறது. இனிமேல் அந்தக் குறவஞ்சியையும் அவள் காதலனையும் முதன்மையாகக்கொண்டு நாடகம் மேலே தொடர்கிறது. அந்தப் பகுதிகள் மிகவும் சுவை யுடையன; இயற்கை உணர்வுகளை இனிதாக எடுத்து இயம்புவன.

女女★