பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 3

விரும்பிச் சென்று, அங்கங்கெல்லாம் திருவிளையாடல் செய்து மகிழ்பவன் சிவகுமரனாகிய குமரப் பெருமான். அவனுடைய ஆறு தலைகளின் மேலும் பொன்னினால் சமைக்கப் பெற்ற ஆறு திருமுடிகளையும் தாங்கியிருப்பவன். அவன். அன்பர்களின் அச்சங்களை எல்லாம் போக்கி, அவர் களுக்கெல்லாம் அருளாளனாக விளங்கும் அப்பெருமான், இதனைப் பாடுவதற்கு எனக்கு எழுகின்ற அச்சத்தையும் போக்கி அருள்வானாக. பன்னிரு திண்தோளனாகத் தன் இரு திருவடிகளை எனக்குப் புகலிடமாகத் தந்தருளும் ஒப்பற்றவன் அந்த முருகப் பெருமான். குற்றாலக் குறவஞ்சியாகிய இத் தமிழினையும் என்னுள்ளே கலந்து நின்று, என்னை இயக்கி இவ்வுலகுக்கு என் வாயிலாகத் தந்து அருளியவனும் அவனே யாவன்!

பன்னிருகை வேல்வாங்கப், பதினொருவர்

படைதாங்கப், பத்துத் திக்கும் நன்னவவீரரும்புகழ, மலைகள் எட்டும்

கடலேழும் நாடி ஆடிப், பொன்னின்முடி ஆறேந்தி, அஞ்சுதலை

எனக்கொழித்துப், புயநான் மூன்றாய்த் தன்னிருதாள் தருகஒருவன் குற்றாலக்

குறவஞ்சித் தமிழ்தந் தானே. (இப்பாடலுள், பன்னிரண்டு முதலாக ஒன்றுவரையுள்ள எண்கள் ஒவ்வொன்றும், நயமுடன் அமைந்துள்ள சிறப்பினைக் காணலாம். நவ வீரர்கள் வீரவாகு தேவரை உள்ளிட்ட ஒன்பதின்மர். இவர்கள் உமையம்மையின் திருச்சிலம்பிலேயிருந்து தோன்றிய நவசக்திகளிடத்துப் பிறந்தவர். பதினொருவர் படை களானும் வெல்லமுடியாத சூரனை வென்ற பெருமை உடையதும், அறுமுகனுக்கே தனித்த சிறப்புடையதும் பற்றி வேலினைத் தாங்கியதைத் தனித்துக் கூறி வியந்து போற்றினர். சிவகுமரன் என்பதற்கேற்ப, மலைகளினும் கடல்களினும் நாடி ஆடின. அவன் திருவிளையாடலையும் போற்றினர். பொன்னின் முடி அழகு சிறந்த திருமுடிகளுமாம். ஒருவன் - ஒப்பற்றவன். தமிழுக்கு முதல்வன் குமரப்பெருமான் என்பது மரபு. தமிழ் முனியாகிய