பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

ஆசிரிய விருத்தம் பூமலி இதழி மாலை புனைந்த குற்றாலத் தீசர் கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட மாமதத் தருவி பாயும் மலையென வளர்ந்த மேனி காமலி தருப்போல் ஐந்து கைவலான் காவ லானே! (மாலைகளுள்ளும் அழகிய புத்தம் புதுமலர்கள் மலிந்துள்ள மாலையினைப் புனைந்தவன் ஈசன் என்பார். பூமலி இதழி மாலை புனைந்த என்றார். புனைதல்’ என்றமையால், அதனால் அவன் அழகு பெற்றவனாகித் திகழ்கின்றமையும் புலனாகும். 'குற்றாலத்து ஈசர் குற்றாலத்துத் திருக்கோயில் கொண்டிருக்கும் ஈசராகிய சிவபெருமான். விநாயகப் பெருமான் யானைமுகன்; ஆதலின், அவனை மதநீர்ப் பெருக்கம் உடையவன் என்றனர். உடலின் தகைமையை மலையெனக் கூறியதற்குப் பொருத்த மாகவே, வழியும் மதநீர் அருவியென வீழும் என்பதும் நயமுடன் அடுத்துக் கூறப்பெற்றது. கைவலான் கைவன்மையுடையவன். 'கைவன்மை உடையவனே காவலனாக விளங்குவதனால் எவ்விதமான இடையூறும் வராமல் காப்பாற்றியருள்வான் என்ற ஒர் உறுதிப்பாடும் அதனாற் புலப்படக், கைவலான் காவலானே' என்றனர். தரு-கற்பகத் தரு, காவலாமே என்பதும் பாடம்)

2. அறுமுகன் தமிழ் தந்தான் பன்னிரு கைகளை உடையவன் அறுமுகனாகிய திருமுருகப் பெருமான். அவனுடைய பன்னிரண்டாவது. கையிலே அவனுக்கே சிறப்பாக உரிய வேலினைத் தாங்கியிருப்பான். பிற பதினொரு கைகளினும், உருத்திரர் பதினொருவருக்கும் உரித்தான தோமரம், கெர்டி, வாள், குலிசம், பகழி, அங்குசம், மணி, பங்கயம், தண்டம், வில், மழு . ஆகிய படைகளையும் தாங்கியிருப்பான். பத்துத் திசை களினும், நவசக்தியிடத்துத் தோன்றியவரான நவவீரர்களும் அவன் புகழைப் போற்றிக் கொண்டிருப்பார்கள். கைலை, மந்தரம், இமயம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலமலை, கந்தமாதனம் என்பன எட்டு மலைகள். நன்னீர், உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பவை ஏழு கடல்கள். இத்தகைய எட்டு மலைகளையும், ஏழு கடல்களையும்