பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 133

ஊருணிப் பற்றும் திருப்பணி நீளம்

உயர்ந்த புளியங் குளத்து வரைக்குளம் மாரனே ரிக்குளம் மத்தளம் பாறை

வழிமறித் தான்குளம் ஆலடிப் பற்றும் ஆரணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய்

அபிடேகப் பேரிக் கணக்கன் பற்றிலும் (சாயினும்) ஐயர்குற் றாலத்து நம்பியார் திருத்து

அப்பா லொருதாதன் குற்றாலப் பேரிச் செய்யம் புலியூர் இலஞ்சிமேலகரம்

செங்கோட்டை சீவல்நல்லூர் சிற்றம்பலம் துய்ய குன்றக்குடி வாழவல் லான்குடி

சுரண்டை யூர்முதல் உக்கிடை சுற்றியே கொய்யு மலர்த்தார் இலஞ்சிக் குமார

குருவிளையாடும் திருவிளையாட்டத்தில். (சாயினும்) (திருத்து, பற்று, பேரி, விளையாட்டம் முதலியன வெல்லாம் விளைநிலப் பகுதிகளைக் குறிக்கும்.)

11. சிங்கியின் அழகு கொட்டுகள் முழங்க அழகுடன் திருநடனம் செய்கின்ற பெருமான் குற்றாலநாதர். அவருடைய திரிகூடமலைச் சாரலிலே, நீட்சியும் ஆழகும் பெற்று விளங்கும் வாள் போன்ற விழிகளும், நெற்றியின்மேல் விளங்கும் அழகான கஸ்தூரிப் பொட்டும், காதழகும், பொன்னணிகளும் உடையவளாக, என்னைவிட்டுப் பிரிந்து சென்ற என் சிங்கியான கட்டழகியினுடைய அழனை எண்ணினால், அது என் கண்ணளவுக்கும் கொள்ளாத பேரழகாயிற்றே!

கொச்சகக்கலிப்பா கொட்டழகு கூத்துடையார் குற்றால நாதர்வெற்பில் நெட்டழகு வாள்விழியும் நெற்றியின்மேல் கத்தூரிப் பொட்டழகும் காதழகும் பொன்னழகும் ஆய்நடந்த கட்டழகி தன்னழகென் கண்ணளவு கொள்ளாதே.

(பொன் - அழகு - திருமகளின் அழகுமாம்)