பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 135

இராகம் - கல்யாணி தாளம் - ஆதி பல்லவி மேயினும் ஐயே! பறவைகள் மேயினும் ஐயே!

அனுபல்லவி

மேயினும் ஐயே குற்றால நாதர் வியன்குல சேகரப்

பட்டிக் குளங்களும் ஆயிரப் பேரியும் தென்காசி யும் சுற்றி அயிரையும்

தேளியும் ஆராலும் கொத்தியே (மே)

சரணங்கள் ஆலயம் சூழத் திருப்பணியுங்கட்டி

அன்னசத்ரங் கட்டி அப்பாலும் தென்காசிப் பாலமும் கட்டிப் படித்தரஞ் சேர்கட்டிப்

பத்த சனங்களைக் காக்கத் துசங்கட்டி மாலயன் போற்றிய குற்றால நாதர்

வழித் தொண்டு செய்திடக் கச்சை கட்டிக்கொண்ட சீலன் கிளுவையிற் சின்னணஞ் சேந்த்ரன்

சிறுகால சந்தித் திருத்துப் புறவெல்லாம் (மே) தானைத் தலைவன் வயித்தியப் பன்பெற்ற சைவக் கொழுந்து தருமத்துக் காலயம் சேனைச் சவரிப் பெருமாள் சகோதரன்

செல்வன் மருதூர் வயித்தியப்பனுடன் மானவன் குற்றால நாதனைப் பெற்றவன்

வள்ளலெனும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாம் கானக் குளத்துள் வாய்க் கீழைப் புதுக்குளம்

கற்பூரக் காற்பற்றும் தட்டான் குளச்சுற்றும் (மே) கிளுவை மன்னனாகவிருந்த சின்னணஞ் சேந்தர னுடைய வடகரை நாட்டுக்கு மந்திரியாகவும், செந்நெல் மலிந்த மருதூர் நகருக்கே ஒரு நாயகமாகவும், தென்காசி என்னும் ஊருக்கே ஒரு தாயகம் போலவும், தன்னை மென் மேலும் உயர்த்துகின்ற ஸ்தானிகனாகவும் விளங்கி, நன்னகராகிய குற்றால நகரின் மீது அந்தாதி சொன்னவனும்