பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

முன்னாட் படுத்த பழம்பெருச்சாளியை

மூத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார் பின்னான தம்பியார் ஆடும் மயிலையும்

பிள்ளைக் குறும்பாற் பிடித்துக்கொண் டேகினார் பன்னரும் அன்னத்தை நன்னகர் ஈசர்

பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக் கீந்தனர் வன்னப் பருந்தொரு கள்வன் கொடுபோனான்

வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே (கண்ணி) மீறும் இலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்

வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள் ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது

அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில் சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்

தாமுங் கொண்டார்சைவர் தாமுங் கொண்டார்தவப் பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்

பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி) (இரண்டாவது பாடலுள் வருவன வெல்லாம் கடவுளர் தமக்கு வாகனமாகக்கொண்ட பறவைகளையும், பெருச்சாளி யையும் பற்றியவை. அவைபற்றிய விவரங்களைப் புராணங்கள் கூறும். அடுத்து முருகன் சூரனாகிய மாமரத்தைத் தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளிலே வென்றான். அது 'சட்டித் திருநாள்' எனப்படும். சாறு - திருவிழா. அதனை அனைவரும் கொண்டாடுவர். இதனை நயம்பட உரைத்தனர்.)

15. பூனைபோல வந்தான் தாருகா வனத்து முனிவர்கள் தம்மீது ஏவிட்ட யானையைத் தாம் குத்திச் சாய்த்த ஆற்றல் உடையவர் திருக்குற்றால நாதர். அவருடைய பண்ணைகளில் எல்லாம் உள்ள இறால்மீன்களைக் கொத்திக் கொண்டு அவற்றை விழுங்க முடியாமல் முக்கிக்கொண்டும் விக்கிக் கொண்டும் இருக்கின்றன கொக்குகள். அவற்றைப் பிடிப்பதற்குரிய வேடர் கூட்டத்திற்குத் தலைமை பெற்ற வாள் வீச்சிலே வல்லவனாகிய சிங்கனிடத்திற்குக் கண்ணியை எடுத்துக்