பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 151

தாமரைமலர் போன்ற பாதங்களின் நடையழகை நீ காட்டாதது என்ன? அதனால் நீ காட்டுவதும் விகாரமே. வாயகன்ற குடத்தைப் போல் விளங்கும் பரந்த கொங்கைகளின் தோற்றத்தைக் காட்டும் சகோரமே! :ற்றுக் குளிர்ச்சியையும் வெம்மையையும் காட்டி விட்டால் எனக்கு உபகாரமாகுமே! என் கட்டித் திரவியமான சிங்கியின் கண்களைப் போலவே தோன்றும் செங்கழு நீர் மலர்களே! என் கண்ணிற் கண்ட இடம் எல்லாம் அவளாகத் தோன்றுதே! நான் ஒரு பாவியேதான், என் செய்வேன்?

இராகம் - ஆகிரி தாளம் - சாப்பு

கண்ணிகள் -

எட்டுக் குரலில் ஒருகுரல் கூவும்புறாவே! எனது

ஏகாந்தச் சிங்கியைக் குவாத தென்னகு லாவே? மாட்டார் குழலிதன் சாயலைக் காட்டும பூரமே! அவள்

மாமலர்த் தாள்நடை காட்டாத தென்னவி காரமே தட்டொத்த கும்பத் தடமுலை காட்டுஞ்ச கோரமே! சற்றுத்

தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட் டாலுய காரமே! கட்டித் திரவியம் கண்போலும் நன்னகர்க் காவியே கண்ணிற் கண்டிடம் எல்லாம் அவளாகத் தோணுதே பாவியே. (மயூரம் - மயில். மட்டு - மணம், சகோரம் - சகோரப்புள். அதன் கொண்டை முலைக்கு உவமானம். வெச்சென்று - வெம்மையாக. திரவியம் - செல்வம். காவி - செங்கழுநீர்)

23. பறவைகள் தப்பிப்போயின?

செட்டிப்பற்றிலே கண்ணி வைத்தேன். என் சிங்கியின் நடையைப் போல நடந்து வந்த சாயலினால், பெட்டைக் குளத்திலே வந்து படிந்த அன்னப் பேட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். கட்டப் பெற்றிருந்த என் கண்ணிகளை யெல்லாம் கொத்தி வெற்றிமுரசம் கொட்டிக்கொண்டு குருவிகள் எல்லாம் குற்றால நன்னகரை நோக்கிப் பறந்து போகின்றனவே! அப்பனே!