பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

- கொச்சகக் கலிப்பா செட்டிபற்றிற் கண்ணிவைத்துச் சிங்சிநடைச் சாயலினாற் பெட்டை குளத்தில் அன்னப் பேடைநடை பார்த்திருந்தேன் கட்டுற்ற நன்னகர்க்கென கண்ணியெலாம் கொத்தி வெற்றி கொட்டிக் கொண்டையே குருவியெலாம் போயினுமே.

(சிங்கன் இவ்வாறு சிங்கியின்மீது கொண்ட மோக வெறி மயங்கி நின்றுவிடப் பறவைகள் பலவும் கண்ணிகளைப் பிடுங்கிக் கொண்டு பறந்துபோய் விட்டன. அவை அப்படிப் போகக் கண்ட சிங்கன் இவ்வாறு புலம்புகின்றான்.)

24. சிங்கன் சொல்லுதல்

போகின்றன. அப்பனே! பறவைகள் போகின்றன அப்பனே! உலகத்துக்கெல்லாம் ஒரே தலைவராகிய குற்றால நாதர், பொல்லாதவனான தக்கனின் யாகத்தை அழித்த அந்த நாளிலே, வாயிலே அடிபட்டும், உடலிலே இடிபட்டும், கால் உதை பட்டும் தேவர்களும் அரசர்களும் ஒருமித்து ஒடிப்போனதைப் போலப் பறவைகள் எல்லாம் தப்பிப் போகின்றன. அப்பனே!

மேடையிலேயிருந்து ஒரு பஞ்சவர்ணக் கிளியானது, அதனை வைத்திருந்த பெண்ணின் கையினின்றும் தப்பி என் முன்பாகப் பறந்து வந்தது. அதனைத் தன் பேடை என்றே தவறாக நினைத்த ஆண்கிளி ஒன்றும் அதனைத் தொடர்ந்து வந்தது. அந்தச் சேவலுக்குப் பின் மற்றொரு சேவலும் அந்தப் பெண்கிளியைக் கூட விரும்பி வந்தது. கருதிவந்த இன்பம் இரண்டுக்கும் கிட்டாமல், அவை சுந்தோப சுந்தர்களைப் போலச் சண்டையிட்டன. அந்தச் சமயம் என்னிடத்திலே ஏற்பட்ட குழப்பத்திலே காடெல்லாம் பட்சிகளாகக் கூடிக் காட்டின் வளத்தைப் பாடுவனபோல இரைச்சலிட்டு, என் கண்ணியையும் தட்டிக்கொண்டு, என் கண்ணிலும் குட்டிவிட்டுப் போய்விட்டனவே அப்பனே!

ஆயிரங் கொக்குகளையாவது இன்றைக்குப் பிடிக்க வேண்டுமென்று நான் கண்ணியை வைத்தேன். அதன்பின்,