பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

அதன்பின், வில்லிப்புத்துர், கருவை நல்லூர், புன்னைக் காவு, முருகனின் திருச்செந்துார், குருகூர், சீவைகுந்தம், நெல்வேலி, சிங்கிகுளம், தேவநல்லூர், நிலைதருஞ்சிற்றுார், கன்னிவாழ் குமரி, திருவாங்கோடு, சொல்லுதற்கும் அரிய குறுங்கை, களக்காடு ஆகிய இடங்களில் எல்லாம் தேடிவிட்டுப் பழைமையான மருதூர், அத்தாள நல்லூர். செல்வர் இருக்கும் சிவசயிலம், பாபவிநாசம் ஆகிய

இடங்களிலும் சென்று சிங்கியைத் தேடுவானானான்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவண்ணா மலைகாஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம்தென் னாரூர் காசி குருநாடு கேதாரம் கோலக் கொண்டை.

கோகரணம் செகநாதம் கும்பகோணம் அரியலூர் சீரங்கம் திருவா னைக்கா

அடங்கலும்போய்ச் சிங்கிதனைத் தேடிச் சிங்கன் வருசிராப் பள்டளிவிட்டு மதுரை தேடி

மதிகொண்டான் திரிகூடம் எதிர்கண் டானே. 1 வில்லிப்புத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள்திருச்செந் துர்குருகூர் சீவை குந்தம் நெய்வேலி சிங்கிகுளம் தேவ நல்லூர்

நிலைதருஞ்சிற்றுர்குமரி திருவாங் கோடு சொல்லரிய குறுங்கைகளாக் காடு தேடித்

தொன்மருதூர் அத்தாள நல்லூர் தேடிச் செல்வர்உறை சிவசயிலம் பாவ நாசம்

திரிகூடச் சிங்கிதனைத் தேடு வானே. 2 (தென்னாரூர் - திருவாரூர். கோலக் கொண்டை - கோல் கொண்டா. கருவை நல்லூர் - கரிவலம் வந்த நல்லூர். புன்னைக் காவு - சங்கர நயினார் கோவில். குருகூர் - ஆழ்வார் திருநகரி. திருவாங்கோடு - திருவிதாங்கோடு; திருவாங்கூர் நாடு. குறுங்கை - திருக்குறுங்குடி. களாக்காடு - களக்காடு. இவை எல்லாம் தேடியதாகப் புலவர் சொல்வது சிங்கனின் காமவாதை