பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16O திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

வெவ்வாப் பறவையின் வேட்டைக்குப் போய்க்காம

வேட்டையைத் தப்பிவிட்டேனே 'வவ்வால் பறக்க மரநாய் அகப்பட்ட'

வைபவம் ஆச்சுது தானே. இவ்வாறு வந்தவென் நெஞ்சின் விரகத்தை

எவ்வாறு தீர்த்துக்கொள் வேனே செவ்வாய்க் கரும்பை அநுராக வஞ்சியைச்

சிங்கியைக் காணுகி லேனே. 4 (ஆலா-பறவை வகைகளுள் ஒன்று. வெவ்வா - விருப்பமுடன். வைபவம் - கதை நிகழ்ச்சி, ஆசைப் பெருக்கம்.)

31. குற்றாலத்தில் வருதல் நல்ல இந்த உலகத்திலே உள்ளவர்கள் யாவரேனும் அவர்கள் இந்த நன்மைதரும் நகரமான குற்றால நகரத்திற்கு வந்தால் சிவப்பேறான பெறுவதற்கரிய பெரும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆவார்கள். இந்த நல்ல நகரத்தை விட்டால் பிரமலோகம் வரைக்குஞ் சென்றாலும் அவர்களுக்குப் பயன் உண்டாகுமோ? வற்றாத வட வருவியினையுடைய மலைச்சாரலைவிட்டு நீங்கிச் சென்று வடகாசி முதல் தென்குமரி வரையும் தேடியலைந்த சிங்கனும், தான் முன் செய்த தவத்தின் பயனால், குற்றால நகரத்திலே வந்து சேர்ந்தான்; சிங்கியைத் தேடலுமானான். -

நற்றாலம் தன்னிலுள்ளோர்யாவ ரேனும்

நன்னகரத் தலத்தில்வந்து பெறுவார்பேறு பெற்றார்தாம் நன்னகரத் தலத்தை விட்டால்

பிரமலோ கம்வரைக்கும் பேறுண் டாமோ வற்றாத வடவருவிச் சாரல் நீங்கி

வடகாசி குமரிமட்டும் அலைந்த சிங்கன் குற்றாலத் தலத்தின்முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கிதனைத் தேடி னானே. (இது கவிக்கூற்று. நல்ல தாலம் - நல்ல உலகம். முன்னே தவம் - முற்பிறவிகளிலே செய்த தவம். கூடினான் - சேர்ந்தான்.)